தகவலறியும் உரிமை சட்டம்

தமிழ்நாடு தகவல் ஆணையம்
ஆணை நாள்:18-04-2017
முன்னிலை
திரு.பி.தமிழ்ச்செல்வன்¸ எம்.பிஎல்
மாநில தகவல் ஆணையர்.
வழக்கு எண்.SA 2127/விசாரணை/பி/2016/X

திரு.செ.மேகவண்ணன் ...... மேல்முறையீட்டாளர்
எதிர்
பொதுத் தகவல் அலுவலர்¸
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்¸
நாமக்கல் மாவட்டம்¸
நாமக்கல். ...... பொது அதிகார அமைப்பு

ஆணையிலிருந்து முக்கிய குறிப்புகள்:
"14. எனவே இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் வழங்கப்படுகின்றன.

மனுதாரரின் 09.12.2015 நாளிட்ட சட்டப்பிரிவு 19(1)ன் கீழான மேல்முறையீட்டு மனுவை 14.12.2015 அன்று பெற்றுக் கொண்டு¸ சட்டப்பிரிவு 19(6)ன்படி குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் மனுதாரருக்கு தகவலை வழங்காமல்¸ மனுதாரரின் மேல்முறையீட்டு மனு மேல்முறையீட்டு அலுவலரால் பெறப்படவில்லை என்று விளக்கம் அளித்ததோடு¸ இரண்டு முறை வாய்ப்பு வழங்கியும் ஆணையத்தின் உத்திரவை மதித்து¸ ஆணையத்தில் நேரிடையாக ஆஜராகி தன்னுடைய விளக்க அறிக்கையை சமர்ப்பித்து¸ தன்னுடைய விளக்கத்தை தெளிவுபடுத்தாமல்¸ தான் உயரதிகாரி என்ற எண்ணத்தோடு¸ ஆணையத்தை மதிக்கக் கூடாது என்ற எண்ணத்தோடும்¸ மனுதாரருக்கு உண்மையான முழுமையான தகவல் வழங்கக் கூடாது என்ற எண்ணத்தோடும்¸ மனுதாரருக்கு உண்மையான முழுமையான தகவல் வழங்கக் கூடாது என்ற கெட்ட எண்ணதோடு மனுதாரருக்கு முன்னுக்குப்பின் முரணாக தகவலும் அளித்த மேல்முறையீட்டு அலுவலர் திரு.கே.பழனிச்சாமி¸ மாவட்ட வருவாய் அலுவலர்¸ நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அவர்கள் மீது 31.01.2017 நாளிட்ட ஆணை பத்தி 4(2)ல் எடுக்கவிருக்கும் நடவடிக்கையை ஆணையம் உறுதி செய்து¸ நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக மாவட்ட வருவாய் அலுவலர் / மேல்முறையீட்டு அலுவலர் திரு.கே.பழனிச்சாமி அவர்கள் மீது அரசு விதிகளின்படி ஓழுங்கு நடவடிக்கை எடுக்க அவரது உயரதிகாரிக்கு பரிந்துரை செய்கிறது. அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேல்முறையீட்டு அலுவலர் திரு.கே.பழனிச்சாமி¸ மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மீது அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து¸ எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை அறிக்கையாக தயார் செய்து¸ இவ்வாணை கிடைக்கப் பெற்ற 30 நாட்களுக்குள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர்¸ வருவாய் நிர்வாகம்¸ பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை¸ சேப்பாக்கம்¸ சென்னை அவர்களை ஆணையம் கேட்டுக் கொள்கிறது. இத்துடன் ஆணையத்தின் 31.01.2017 மற்றும் 07.03.2017 நாட்களிட்ட ஆணைகள்¸ மேல்முறையீட்டு அலுவலர் திரு.கே.பழனிச்சாமி அவர்களின் 27.02.2017 மற்றும் 03.04.2017 நாட்களிட்ட விளக்க அறிக்கைகள்¸ மனுதாரரின் 09.12.2015 நாளிட்ட மேல்முறையீட்டு மனு¸ மனுவை 14.12.2015 அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டதற்கான தபால் துறையின் அத்தாட்சிக் கடிதம்¸ 18.04.2016 நாளிட்ட கடிதத்தில் மேல்முறையீட்டு அலுவலரால் மனுதாரருக்கு தகவல் வழங்கப்பட்ட கடிதம் மற்றும் 24.01.2017 நாளிட்ட பொதுத் தகவல் அலுவலரால் மனுதாரருக்கு தகவல் வழங்கப்பட்ட கடிதம் ஆகியவை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது."

ஆணையை முழுமையாக படிக்க (அ) பதிவிறக்கம் செய்ய

No comments:

Post a Comment