மாற்று முறை ஆவண சட்டம் பிரிவு 138, 139

குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம். (விரைவு நீதிமன்றம்). வேலூர். முன்னிலை. திரு.கோ.பிரபாகரன். பி... எம்.எல்..
நீதித்துறை நடுவர் ( பொறுப்பு). விரைவு நீதிமன்றம். வேலூர்.
2014-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 25-ஆம் நாள் செவ்வாய் கிழமை. ஆண்டுப்பட்டிகை வழக்கு எண். 46-2012

எஸ். சவுந்தரராஜன். வயது 80.
-பெ. சுப்பிரமணிய நாடார்.
நெ. 9. 5வது கிழக்கு குறுக்கு தெரு.
காந்தி நகர். காட்பாடி தாலுக்கா.
வேலூர் மாவட்டம். ............ வாதி.
எதிர்
கே.. ராகவன் நாயுடு. வயது 59.
-பெ. ஆழ்வார்சாமி நாயுடு.
எண் 4-1901-. துர்காநகர்.
கிரீம்ஸ்பெட். சித்தூர்.
ஆந்திரா மாநிலம். ............ எதிரி.

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

1. இவ்வழக்கானது மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 138-ன் கீழான குற்றத்திற்காக வாதியால் எதிரியின் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள தனியார் குற்றமுறையீட்டின் அடிப்படையில் எழுந்ததாகும்.

21. எதிரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள Messrs, Modi Fulchand Narsida Vs Navnitlal Ranchhoddeas AIR 1962 Gujarat Page 295 என்ற வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் ஒப்பந்த மீறுகையினால் ஏற்படும் இழப்பீடு கோருரிமைகள் கடன் என்ற பதத்தின் கீழ் வராது என்று கூறியுள்ளது. ஆனால் கையில் உள்ள வழக்கில் வாதியால் கொடுக்கப்பட்ட சேவைக் கட்டணத்திற்கு எதிரியானவர் வழக்கு காசோலையை கொடுத்து அது பணமாக்கப்படாமல் திரும்பி வந்துள்ள சூழ்நிலையில் எதிரிக்கு குற்ற பொறுப்பு நிலை (Criminal Liability ) ஏற்ப்பட்டுவிடுகிறது. மேலும் கையில் உள்ள வழக்கிலும் எதிரி வாதிக்கு வழங்க வேண்டிய கடன் எதுவும் இல்லை என்று ஏற்கனவே இந்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஆனால் கமிஷன் தொகையை திருப்பி கொடுக்க வேண்டிய பொறுப்பு நிலை எதிரிக்கு உள்ளது. எனவே மேலே சொன்ன குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பு இந்த வழக்கின் பொருண்மைக்கு முற்றிலும் பொருந்திவரவில்லை என முடிவு செய்யப்படுகிறது. அதே போல் எதிரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள Bank of India Vs Vijay Ramniklal Kapadia ( AIR 1997 Gujarat Page 75 ) என்ற வழக்கில் கையாடல் செய்த பணம் கடன் என்ற பதத்தின் கீழ் வராது என்றும் அதை கடன் வசூல் தீர்ப்பாயத்தின் மூலமாக வசூலிக்க இயலாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதே வழக்கில் வியாபாரம் நிமித்தம் ஒரு நபர் மற்றொரு நபருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகை எதுவும் கடன் என்ற பதத்தின் கீழ் வரும் என்று கூறியுள்ளது. இந்த தீர்ப்பானது வாதியின் வழக்கிற்கு சாதகமாக அமைந்துள்ளது.

22. எதிரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள Mrs.Devarsha Dnyaneshwar ParobVs Mulgab – Sirigab – Advalpal & Anr. ( 2010 CrI. L.J Page 4731 ) என்ற வழக்கில் பாம்பே உயர்நீதிமன்றம் கோவா அமர்வு கடன் தொகைக்காக காசோலை கொடுக்கப்பட்டது என்று வாதி நிரூபிக்காத பட்டசத்தில் எதிரியை மாற்று முறை ஆவணச் சட்டம் பிரிவு 138 ன் கீழ் குற்றவாளி என முடிவு செய்ய இயலாது என்று கூறியுள்ளது. மேற்படி வழக்கில் வாதியானவர் எதிரிக்கு கடன் கொடுத்ததற்கு உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாத காரணத்தினால் உயர்நீதிமன்றம் அவ்வாறு முடிவு செய்துள்ளது. ஆனால் கையில் உள்ள வழக்கில் வாதி காசோலை மூலமாக ரூபாய் 40 லட்சம் சேவைக் கட்டனமாக எதிரிக்கு வழங்கி அது கடந்த 19.11.2010 அன்று எதிரியின் வங்கி கணக்கில் பணமாக்கப்பட்டுள்ளது என்பது வா..சா..9ன் மூலமாகவும் வா.சா. 2 மற்றும் வா.சா.3 ஆகியோர்களின் வாய்மொழி சாட்சியங்கள் வாயிலாகவும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிரி ஒப்பந்தத்தின் படி கடன் தொகையை ஏற்பாடு செய்துக் கொடுக்கவில்லை என்பதும் எதிரி தரப்பில் ஒப்புக் கொண்டு இருக்கும் பட்சத்தில் சேவைக் கட்டனத்தை வாதிக்கு எதிரி திரும்ப செலுத்த வேண்டிய பொறுப்பு நிலை இருக்கின்ற காரணத்தினால் மேலே சொன்ன பம்பாய் உயர்நீதிமன்ற தீர்ப்பு இந்த வழக்கின் பொருண்மைக்கு முற்றிலும் பொருந்திவரவில்லை என முடிவு செய்யப்படுகிறது

31. எதிரி தரப்பில் கடந்த 26.12.2011 அன்று எதிரி தெலுங்கான மாநிலம் கொத்தகுடம் தட்டிப்பள்ளி ரெசிடன்சியில் இருந்தார் என்றும் வா..சா.. 10 ஆவணம் எதிரியால் எழுதப்படவில்லை என்று வேற்றிடவாதம் ( Plea of Alibi ) என்ற வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வா..சா.. 10 ல் கையொப்பம் மட்டும் எதிரியிடம் பெறப்பட்டு வாசகங்கள் வாதியால் நிரப்பிக் கொள்ளப்பட்டுள்ளது என்ற வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. வா..சா.. 10 ஆவணம் கவனமாக பரிசீலணை செய்யப்பட்டது. அந்த ஆவணம் முழுவதுமாக எதிரியால் எழுதப்பட்டு கையொப்பம் செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது. மேலும் 26.12.2011 அன்று எதிரி கொத்தகுடம் தட்டிப்பள்ளி ரெசிடன்சியில் இருந்தார் என நிரூபிக்க எ.சா. 1 விசாரிக்கப்பட்டு அவர் மூலமாக எ..சா.. 3 மற்றும் எ..சா..4 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. .சா.2 ன் குறுக்கு விசாரணையின் போது அவர் அளித்த பதில்களிலிருந்து அவர் எதிரியால் உருவாக்கப்பட்ட சாட்சி என்பதும். மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு ஆவணங்களும் வழக்கிற்காக உருவாக்கப்பட்டவை என்பதும் தெரிய வருகின்றது . மேலும் எ..சா.. 4 ஆவணத்தில் எதிரி எந்த தேதியில் ரெசிடன்சியை விட்டு புறப்பட்டுச் சென்றார் என்பதற்குரிய மேற்குறிப்பு இல்லை. மேலும் வா..சா..10 ஆவணம் ஒரு ஆதரவு ஆவணமாக ( Supporting document ) மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. எனவே எதிரி தரப்பில் எழுப்பப்பட்டுள்ள வேற்றிட வாதம் என்பது நிராகரிக்கப்படுகிறது.மேலும் இந்த வழக்கானது கொலை . கற்பழிப்பு. கொள்ளை. திருட்டு போன்ற குற்ற வழக்கு அல்ல. மேலும் எதிரிக்கு தமிழ் தெரியாது என்ற வாதமும் ஏற்புடையதாக அமையவில்லை. ஏன்னென்றால் அவர் வா..சா..10 ஆவணத்தை தமிழில் எழுதியுள்ளார். மேலும் நீதிமன்றத்தில் கு.வி.மு.. பிரிவு 313 (1 ) ஆ வின் கீழ் தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு புரிந்துக் கொண்டு அளித்த பதில்களை முன்னால் இருந்த நீதிபதி தெளிவாக பதிவு செய்துள்ளார்.

34. கற்றறிந்த வாதியின் வழக்கறிஞர் மாற்று முறை ஆவண சட்டம் பிரிவு 139 ன் படி காசோலையில் உள்ள கையொப்பத்தை எதிரி ஒப்புக் கொண்டாலும் வாதியின் வழக்கு மறுத்து எதிரியால் நிரூபிக்கப்படாத பட்சத்திலும் காசோலையானது சட்டப்படி செயலாக்கம் செய்யக்கூடிய கடனுக்காகவோ அல்லது மற்ற பொறுப்பு நிலைக்காகவோ கொடுக்கப்பட்டதாக தான் எதிரிக்கு எதிராக கட்டாயம் அனுமானம் கொள்ள வேண்டும் என்று வாதிட்டுள்ளார். இது குறித்து மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றம் சி.கேசவமூர்த்தி எதிர் எச்.கே.அப்துல்ஜபார் (2013 (4) கிரைம்ஸ் எஸ்.சி. பக்கம் 393) வழக்கில் மற்றும் ரங்கப்பா எதிர் ஸ்ரீமோகன் (2010 4 சி.டி.சி. பக்கம் 118) சொல்லப்பட்டுள்ள சட்டக் கருத்துக்களை மேற்கோள் காட்டினார். மேற்படி இரண்டு தீர்ப்புகளையும் அவர் பட்டியலில் குறிப்பிடவில்லை. மேற்படி இரண்டு தீர்ப்புகளிலும் உச்ச நீதிமன்றம் காசோலையில் உள்ள கையொப்பத்தை எதிரி ஒப்புக் கொண்டால் அந்த காசோலையானது தகுந்த பிரதி பலனுக்காக கொடுக்கப்பட்டதாக அனுமானம் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. கையில் உள்ள வழக்கிலும் எதிரியானவர் வழக்கு காசோலையில் உள்ள கையொப்பத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் கு.வி.மு.. பிரிவு 313 (1 ) ஆ வின் கீழான வினாவின் போது வாதியிடமிருந்து சேவைக் கட்டனமாக தான் இரண்டு ஒப்பந்தங்களுக்காக ரூபாய் 40 லட்சம் பெற்றது உண்மை என்றும் வாதி ஆவணங்கள் ஏதும் கொடுக்காததால் கடன் ஏற்பாடு செய்ய முடியவில்லை என்று தான் ரூபாய் 40 லட்சத்தை திருப்பி தர வேண்டியது இல்லை என்றும் கூறியுள்ளார். எதிரியானவர் வாதியின் வழக்கை ஒப்புக் கொண்டு கு.வி.மு.. பிரிவு 313 (1 ) ஆ வின் கீழான வினாவின் போது பதில் அளித்துள்ளார். மேலும் வழக்கு காசோலையானது பணமாக்கப்படாமல் திரும்ப வந்ததும் வாதி தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

35. எதிரி தரப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட அனைத்து வாதங்களும் ஏற்புடையதாக அமையவில்லை. ஏன்னென்றால் ரூபாய் 40 லட்சம் வாதியிடமிருந்து எதிரி காசோலை மூலமாக பெற்று பணமாக்கிக் கொண்டு கடன் ஏற்பாடு செய்துக் கொடுக்காமல் பின்னர் ரூபாய் 40 லட்சம் சேவைக் கட்டணத்தை திருப்பிக் கொடுக்கும் பொருட்டு வழக்கு காசோலையை கொடுத்து அது பணமாக்கப்படாமல் திரும்ப வந்துள்ளது என்பதை வாதி தரப்பில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வாதி தரப்பில் உள்ள சில நடைமுறை குறைகளை மட்டும் கருத்தில் கொண்டு வாதியின் வழக்கை நிராகரிக்க இயலாது. வாதி தரப்பில் உள்ள சில நடைமுறை குறைகளை மட்டும் கருத்தில் கொண்டு வாதியின் வழக்கை எதிரி மறுத்து நிரூபித்துள்ளார் என முடிவு செய்ய இயலாது. ஏன்னென்றால் காசோலை மோசடிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக இந்திய உச்ச நீதிமன்றம் ரங்கப்பா எதிர் ஸ்ரீமோகன் (2010 4 சி.டி.சி. பக்கம் 118) வழக்கில் காசோலையில் உள்ள கையொப்பத்தை எதிரி ஒப்புக் கொண்டால் அவருக்கு எதிராக மாற்று முறை ஆவண சட்டம் பிரிவு 139 ன் கீழான அனுமானம் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. ரூபாய் 40 லட்சத்தை எதிரி பெற்றுக் கொண்டு அதற்கான காசோலையும் கொடுத்துவிட்டு அது பணமாக்கப்படாமல் திரும்ப வந்துள்ள சூழ்நிலையில் வாதி தரப்பில் உள்ள சில நடைமுறை குறைகளினால் குற்றப் பொறுப்பு நிலையிலிருந்து எதிரி தப்பித்துக் கொள்ள இயலாது.

38. இறுதியில் மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 138 ன் கீழ் எதிரியை குற்றவாளி என முடிவு செய்து கு.வி.மு.ச பிரிவு 255(2)-ன் படி அவருக்கு இரண்டு ஆண்டுகள் மெய்க்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 5.000/- அபராதமும் விதிக்கப்படுகிறது. எதிரி அபராத தொகையை கட்டத் தவறினால் மூன்று மாதம் மெய்க்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென தீர்ப்பளிக்கப்படுகிறது. இது அழைப்பாணை வழக்கு என்பதால் எதிரியிடம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து கேள்வி கேட்கப்படவில்லை. இன்றிலிருந்து 6 மாதத்திற்குள் எதிரி வாதிக்கு கு.வி.மு.. பிரிவு 357 ன் படி ரூ.35.00.000/- நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.

தீர்ப்பை முழுமையாக படிக்க () பதிவிறக்கம் செய்ய


No comments:

Post a Comment