பிரதிவாதிக்கு எதிரான அனுமானம்

மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம். பூதப்பாண்டி.
முன்னிலை. திரு. ஜி.இசக்கியப்பன்.பிபிஎஎல்.எல்.பி
மாவட்ட உரிமையில் நீதிபதி
2015ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 9ஆம் நாள் திங்கட்கிழமை.
அசல் வழக்கு எண் 293/12
முருகன் ........ வாதி
-எதிர்-
பாரதி இன்பிரட்டல் லிமிடெட்-க்காக அதன் மேலாளர் ..... பிரதிவாதி

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

8. இந்த வழக்கில் கற்றறிந்த வாதி தரப்பு வழக்கறிஞர் தனது வாதுரையில்

AIR 1999 Supreme Court 1441
Vidhyadhar Vs. Mankikrab and another
Evidence Act (1 of 1872), S.114 – Adverse inference – Party to suit – Not entering the witness box – Give rise to inference adverse against him. Where a party to the suit does not appear intb the witness box and states his own case on oath and does not offer himself to be cross examined by the other side, a presumption would arise that the case set up by him is not correct.''

2005(3) CTC 128
Janki Vashdeo Bhojwani and another Vs. Indusind Bank Ltd., and others. “Where person does not appear in witness box and state his.her case on oath and does not offer to be cross examined by other side, presumption would arise that the case set up by such person is not correct – In civil dispute conduct of party is material''

ஆகிய முன்தீர்ப்புகளை எடுத்துரைத்து இந்த வழக்கில் பிரதிவாதியே தான் வாதியின் வாடகைதாரர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார் என்றும். வா.சா..1 முதல் 7 ஆவணங்கள் மூலம் வாதிக்கு பிரதிவாதி வாடகை பாக்கி கொடுக்க வேண்டியுள்ளது என்பதை வாதி நிரூபணம் செய்துள்ளார் என்றும் பிரதிவாதி அதை எதிர்வழக்குரையில் மொத்தமாக மறுத்துள்ளாரேதவிர குறிப்பிட்டு எதுவும் மறுக்கவில்லை என்றும் மற்றும் இந்த வழக்கில் பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்கவில்லை என்றும் இந்தநிலையில் பிரதிவாதிக்கு எதிரான அனுமானத்தை எடுக்கவேண்டுமென்றும் வாதியின் வழக்கை அனுமதிக்க வேண்டுமென்றும் வாதிட்டார்.

9. இந்த வழக்கில் பிரதிவாதி வாதியின் வாடகைதாரர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். வாதி தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் எதுவும் பிரதிவாதி தரப்பில் குறிப்பிட்டு மறுக்கப்படவில்லை. பிரதிவாதி வாதிக்கு மாத வாடகை ரூ.5000/-வீதம் 12 மாத வாடகை ரூ.60000/-கொடுப்பதாக தெரிவித்துள்ளது ஆகஸ்ட் 2007 கடிதமான வா.சா..1¸2 ல் காணப்படுகிறது. வா.சா..3ல் ஆகஸ்ட் 2007 முதல் ஜூலை 2008 வரை ரூ.27000/-மட்டும் செலுத்தியதாக காணப்படுகிறது. மேலும் பாக்கி தொகை கேட்டு வா.சா..4¸ 6 மூலம் வாதி வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியுள்ளார். அது பிரதிவாதியால் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அறிவிப்பு தனக்கு சார்வாகவில்லை என்று மறுத்துள்ள பிரதிவாதி தான் அதை நிரூபணம் செய்திருக்க வேண்டியது. ஆனால் பிரதிவாதி தரப்பில் எவ்வித சாட்சியமும் அளிக்கப்படவில்லை எந்த ஆவணமும் குறியீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில் வாதி தன் பக்க வழக்கை நிரூபணம் செய்துள்ளார் என்கிற முடிவுக்கு வந்து. பிரதிவாதி வாதிக்கு வாடகை பாக்கி தொகை ரூ.47.500/-செலுத்த கடமைபட்டுள்ளார் என்று எழுவினா 1க்கு விடைகாணப்படுகிறது.

தீர்ப்பை முழுமையாக படிக்க (அ) பதிவிறக்கம் செய்ய

1 comment:

  1. நல்ல முயற்ச்சி...தமிழ் வளர்ச்சி

    ReplyDelete