ஒரு முகவரோ ஒரு சொத்தை பார்வையிட நிர்ணயிக்கப்பட்டவரோ நீண்ட நாட்களாக அவர் இருந்ததாலோ உடைமை கொண்டதாலோ அவருக்கு அச்சொத்தின் பாற் எவ்வித உரிமையும் எற்படாது

கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸ அம்பாசமுத்திரம்
முன்னிலை:- திரு..ராஜ்குமார்¸ எம்..பி.எல்
கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ அம்பாசமுத்திரம்.
திருவள்ளுவராண்டு 2048¸ துர்முகி வருஷம்¸பங்குனித்திங்கள் 2ம் நாள் 2017-ம் ஆண்டு மார்ச் திங்கள் 15-ம் நாள் புதன்கிழமை
அசல் வழக்கு எண். 82/2016
உச்சிமகாளி ... வாதி
/எதிர்/
S.கணேஷ் ... பிரதிவாதி

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:
2017(1)சி.டி.சி.755ல் வெளியாகியுள்ள பெக்ராம் பேஜானி /எதிரிடை/ அசின் ஜெகானி என்ற வழக்கில் மாண்பமை இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய முன் தீர்ப்பை படித்தறிகையில் முற்றுப் பெற்ற அனுபவம் மற்றும் நீண்ட நாட்களாக ஒரு சொத்தில் அனுபவம் உள்ளது என்பதன் மூலம் ஒரு சொத்தை சார்ந்த நலன் ஒருவருக்கு கிடைக்கப்பெறாது என்று சொல்லப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

13) மேற்படி முன் தீர்ப்பில் எடுத்தாளப்பட்டுள்ள 2012(1)எம்.டபிள்ய10.என்.சிவில்.840 (சுப்ரீம் கோர்ட்)ல்) வெளியாகியுள்ள மரிய மர்ஹரிதா சீக்வேரா பெர்னான்டஸ் மற்றும் பிறர் /எதிரிடை/ எரரர்மா ஜேக்டி சீக்வேரா(இறப்பு) சட்டபிரதிநிதிகள் மூலம் என்ற வழக்கில் ஒரு நபரை குடியிருக்க கருணையின் பாற் அனுமதி அளிக்கும் போது நீண்ட நாட்களாக அச்சொத்தின் அனுபவத்தில் இருந்தால் அதன் மூலம் அச்சொத்தின் உரிமையோ¸ நலனோ ஒரு நபருக்கு கிடைக்கப்பெறாது என்றும்¸ ஒரு சொத்தின் காவலாளியோ¸ வேலைக்காரரோ¸ அச்சொத்தை பார்ப்பதற்காக என நிர்ணயிக்கப்பட்டவரோ¸நீண்ட நாட்களாக அச்சொத்தில் இருந்தாலும் அவருக்கு அச்சொத்தில் எவ்வித நலனும் கிடைக்கப்பெறாது என்றும்¸ வேலைக்காரரோ¸ அச்சொத்தை பார்ப்பதற்காக என நிர்ணயிக்கப்பட்டவரோ¸உரிமையாளர் வேண்டும்போது உடனடியாக அனுபவத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும்¸ ஒரு சொத்தில் காவலாளியாகவோ¸ உறவினர் என்ற நிலைமையிலோ¸ நண்பர் என்ற முறையிலோ அச்சொத்தை பாதுகாக்க நிர்ணயிக்கப்பட்டிருந்தவரோ உடைமையை கொண்டிருந்தால் நீதிமன்றம் அந்த உடைமையினை அங்கீகரிக்க கூடாது என்றும்¸ நீதிமன்றம் மூலமாக அளிக்க கூடிய பாதுகாப்பானது செல்லத்தகு மற்றும் நிலுவையில் உள்ள வாடகை ஒப்பந்தம்¸ அனுமதி ஒப்பந்தம் யாருக்கு ஆதரவாக உள்ளதோ அவருக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்றும் ஒரு முகவரோ ஒரு சொத்தை பார்வையிட நிர்ணயிக்கப்பட்டவரோ அச்சொத்தை அந்த முதல்வரின் நலனுக்காக அவருக்கு பதிலாகத்தான் அதில் இருக்கிறார் என்றும் நீண்ட நாட்களாக அவர் இருந்ததாலோ உடைமை கொண்டதாலோ அவருக்கு அச்சொத்தின் பாற் எவ்வித உரிமையும் எற்படாது என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

ஒருவர் தன்னை சட்டப்படி அல்லாத வழியில் காலி செய்யக்கூடாது என்ற பரிகாரத்தை கோரினால் அவர் எந்த உறவுமுறையில் அச்சொத்தில் குடியிருந்து வருகிறார் என்பதையும் அவருக்கு அச்சொத்தின் உரிமையாளரோ¸ பிறரோ எந்த வகையான அச்சுறுத்தலை ஏற்படுத்தினார் என்பது பற்றியும் நிரூபிக்கவேண்டிய கடப்பாடு அப்பரிகாரத்தைக் கோரும் நபர்க்கு உண்டு. வாசாஆ-6 ஆனது இவ்வழக்கிற்கு சுமார் 15 நாட்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டதாக வாசாஆ-5ன் மூலம் தெரியவருகிறது. அதில் பிராதில் சொல்லியுள்ள¸ பிரதிவாதி அவரது முகவர்¸ அடியாட்கள் மற்றும் காவல்நிலையம் மூலம் மிரட்டினார் என்று எவ்வித கூற்றும் வாதியால் சொல்லப்படவில்லை. மாறாக வாசாஆ-6ல் தபசில் சொத்தின் உரிமையாளரிடம் எதையும் கோராமல் அவரது மகனிடம் தன்னை வாடகை கட்டுப்பாட்டு சட்டப்படிதான் காலி செய்ய வேண்டும் என்றும் சட்டமுறையற்ற முறையில் நடவடிக்கை எடுக்ககூடாது என்று மட்டும் தான் கோரப்பட்டுள்ளது. தனக்கு பிரதிவாதியால் எந்த பீதி¸பயம் ஏற்பட்டது என்பது பற்றி சிறிதளவும் நிரூபிக்காத நிலையில் வாதிக்கும் சொத்தின் உரிமையாளருக்கும் இடையே செல்லத்தகு வாடகை ஒப்பந்தம் உண்டு என்றும் வாதி தரப்பில் நிரூபிக்கப்படாத நிலையில் இவ்வழக்கை தள்ளுபடி செய்வதே நீதியின் பொருட்டு உகந்ததாக இருக்கும் என்று இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது.


தீர்ப்பை முழுமையாக படிக்க () பதிவிறக்கம் செய்ய

1 comment: