பிரிவு 12 வசதியுரிமை சட்டம்

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம். புதுக்கோட்டை
முன்னிலை திரு. எஸ். பிரின்ஸ் சாமுவேல் ராஜ்பி..பி.எல்
மாவட்ட உரிமையியல் நீதிபதி. புதுக்கோட்டை
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 7ஆம் நாள் வியாழக்கிழமை
திருவள்ளுவராண்டு 2047 பங்குனி திங்கள் 24ஆம் நாள்
அசல் வழக்கு எண் .102-2009
1. பாண்டிகிருஸ்ணன்
2. வள்ளிக்கண்ணு
3. நாகரெத்தினம்
4. நாகராஜன்
5. ராமசாமி
6. அலமேலு மங்கை Memo as per
order dated 3.7.14 CSR No.98/14
7. லலிதாபிரியதர்ஷினி
8. நாகராசன்
9. முத்துக்குமார்
10. ராஜேஸ்வரி
11. கௌரி          .... வாதிகள்
                   - எதிராக-
1. தனசேகரன்
2. அவனிநாதன் பர்னிச்சர் மார்ட் உரிமையாளர்
3. பெரியநாயகி நகை மாளிகை உரிமையாளர்
4. சபரி பைனான்ஸ உரிமையாளர்
5. வெங்கடேஷ் பைனான்ஸ் உரிமையாளர்
6. அகிலா போட்டா ஸ்டுடியோ உரிமையாளர்
7. ஜெ.பி.கம்யூட்டர்ஸ் உரிமையாளர்            ....பிரதிவாதிகள்

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:
10. மேற்படி வா.சா.. 13 வரைபடத்தை அளித்த 1ம்பிரதிவாதி தான் வாதிகளுக்கு வசதி உரிமை உள்ளதா என்பது குறித்து கூறுவதற்கு ஏற்புடைய நபர் ஆவார். இவ்வழக்கில 1ம்பிரதிவாதி வாதிகளுக்கு வழக்கு '" அட்டவணைச் சொத்தில் உரிமை இல்லை என்று எதிர்வழக்குரை தாக்கல் செய்துள்ளார். ஆனால் அதனை நிரூபிக்கும் வகையில் அவர் நீதிமன்றத்தில் சாட்சியம் ஏதும் அளிக்கவில்லை. எனவே அவர் மீது எதிரிடை அனுமானம் கொள்ளலாம் என வாதி தரப்பில் கீழ்கண்ட முன்தீர்ப்பு மேற்கோள் காட்டி வாதிடப்பட்டது.

2007 (3) CTC 59
T. Tamilarasan vs Arokkiasamy and others
Evidence Act. 1872 ( 1 of 1872), Section 114 - Adverse Inference - Party not entering witness box - Only filing statement of oath - Adverse inference can be drawn - Judgment of Apex Court in Vidhyadhar vs Mankikrao, 19999 AIR SCW 1129 relied on)


மேற்படி முன்தீர்ப்பின் படிக்கு 1ம்பிரதிவாதி சாட்சியம் ஏதும் அளிக்காததால் வழக்கு '" அட்டவணைச் சொத்தில் வாதிகளுக்கு உரிமை இல்லை என 1ம்பிரதிவாதியால் கூறப்படுவது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல என இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. மேலும் மேற்படி வா.சா.1 முதல்11 மற்றும் 13 ஆவணங்களின் மூலம் வாதிகளுக்கு வசதியுரிமையை பிரதிவாதி அளித்துவிட்டு. அதற்கு முரண்பட்டு 1ம்பிரதிவாதி கூறுவது இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 115-ன் படிக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கு '" அட்டவணைச் சொத்தை வாதிகள் பயன்படுத்த உரிமை உள்ளவர்கள் என இந்நீதிமன்றம் வாதிகளுக்கு சார்பாக தீர்மானிக்கிறது.

பிரதிவாதி தரப்பில் வா.சா.1-க்கு அவருடைய மகன் பவர்பத்திரம் ஏதும் வழக்கு தாக்கல் செய்யும்போது எழுதிக்கொடுக்கவில்லை எனவும். எனவே அவர் வழக்கு தாக்கல் செய்திருப்பது நிலைக்கதக்கதல்ல என பிரதிவாதி தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் பிரிவு 12 வசதியுரிமை சட்டத்தின் படிக்கு
எந்த நிலையியல் சொத்தினைப் பயனளிக்கும் வகையில் துய்ப்பதற்காக ஒரு வசதியுரிமை ஏற்படுத்தப்படுகிறதோ அந்த நிலையில் சொத்தின் சொந்தக்காரரால் அல்லது அவரது சார்பில் அதனை உடைமையில் கொண்டுள்ள ஆள் எவராலும் அந்த வசதியுரிமையானது ஈட்டப்படலாம். நிலையியல் சொத்தின் கூட்டுச் சொந்தக்காரர்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். அக்கூட்டுச் சொந்தக்காரர்கள் என்ற முறையில். மற்றவர் அல்லது மற்றவர்களின் இசைவுடனோ அல்லது இசைவின்றியோ. அந்தச் சொத்தினைப் பயனளிக்கும் வகையில் துய்ப்பதற்காக வசதியுரிமையை ஈட்டலாம். என கூறப்பட்டுள்ளது. எனவே சொத்தின் உரிமையாளரும் மற்றும் சுவாதீனத்தில் இருப்பவரும் வசதியுரிமையை கோரலாம் என்பதால் ;வா.சா.1-க்கு வழக்கு தாக்கல் செய்யும்போது அதிகார பத்திரம் அளிக்கப்படவில்லை என்கிற பிரதிவாதிகளின் வாதம் ஏற்புடையதல்ல என இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. மேலும் வாதிகள் தரப்பில் வா.சா.1-ன் மகன் எழுதிக்கொடுத்ததாக கூறப்படும் பொது அதிகார பத்திரம் வழக்கு விசாரணையின் போது வா.சா..16-ஆக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே வாதி தரப்பில்

( 2006) 3 M.L.J. 287
M. Vairavan Vs R.V. Periannan Chettiar and others
Civil procedure Code ( 5 of 1908) - Order 3 Rules 1 and 2. Order 6 Rules 14 and 15 - The powers of Attorney Act ( 7 of 1882), Section 2 - Contract Act ( 9 of 1872). Sections 196 and 199 - power of Attorney executed by co-plaintiffs in favour of one plaintiff - Power Deed not an nexed with the plaint - It can be received at the stage of arguments - Non - production of power of Attorney at the earlier stage, is a procedural defect, which is curable - Since no prejudice is caused to the other side, it can be received at the stage of arguments - Revision dismissed.

மேற்படி முன்தீர்ப்பில் கூறியுள்ளபடி இவ்வழக்கிலும் பின்னிட்டுதான் பவர்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே மேற்படி முன்தீர்ப்பு வழக்கிற்கு பொருந்துவதாக அமைந்துள்ளது. எனவே வழக்கு 6ம்பிரதிவாதியால் கையெழுத்து செய்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது நிலைக்கதக்கது என இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. ஏற்கனவே எழுவினா 1-ல் வாதிகளுக்கு வழக்கு '" அயிட்ட சொத்தில் உரிமை உள்ளது என இந்நீதிமன்றம் தீர்வு கண்டுவிட்டதால் '" அயிட்ட சொத்திற்கு இரண்டுபுறமும் உள்ள பிரதிவாதிகள் வாதிகளின் உரிமையை தடுக்க எவ்வித உரிமையும் இல்லை என இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. எனவே வாதிகள் உறுத்துக்கட்டளை பரிகாரம் பெற உரிமை உடையவர்கள் என இந்த எழுவினாவிற்கு தீர்வு காணப்படுகிறது.

தீர்ப்பை முழுமையாக படிக்க () பதிவிறக்கம் செய்ய

No comments:

Post a Comment