சுவற்றை அப்புறப்படுத்த செயலுத்துக்கட்டளை

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸அவினாசி
முன்னிலை: திரு..எம்.ரவி¸ பி..பி.எல்
மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ அவினாசி.
2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் செவ்வாய்கிழமை
(2045 திருவள்ளுவராண்டு ஜய வருடம் புரட்டாசி மாதம் 28 ஆம் நாள்)
அசல் வழக்கு எண்.14/2008
அமுதா …. வாதி
.. எதிராக..
1. பாரதி
2. தயாளன்(இறந்துவிட்டார்)
3. பாப்பாத்தி
4. இந்துமதி
5. காந்திமதி
(..541/2010 மனுவில் 08.06.2010 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவுப்படி
வழக்குரையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது) .......பிரதிவாதிகள்

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:
''இவ்வழக்கில் எழுவினாக்கள் 1¸3¸4¸ மற்றும் கூடுதல் எழுவினாக்கள் 1¸2. ஆகியவற்றிக்கு கண்ட விரிவான விளக்கங்கள் படி¸ வாதி வா.சா..1ன் மூலம் கிரையம் பெற்ற சொத்திற்கு தாவா "" அயிட்ட பொதுப்பாதை வழியாக சென்று வருகிறார் என்றும் அதனால்¸ தாவா "" அயிட்ட பொதுப்பாதை வழியாக அவர் கிரையம் பெற்ற சொத்திற்கு சென்று வரும் பாதை பாத்திய உரிமையை விளம்புகை செய்தும்¸ அதன் தொடர் பரிகாரமாக தாவா "" அயிட்ட பாதையில் வாதி கிரையம் பெற்ற சொத்திற்கு சென்று வருவதை பிரதிவாதிகளோ¸ அவரது முகவர்களோ¸ தடை செய்யக்கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் பெற வாதி உரிமையுடையவர் ஆவார் என்றும்¸ தாவா "" அயிட்ட பொதுப்பாதையில் வழக்கு நிலுவையில் இருந்த சமயத்தில் பிரதிவாதிகள் எழுப்பி உள்ள 3 அடி உயர சுவற்றை அப்புறப்படுத்த வாதி செயலுத்துக்கட்டளை பெற வாதி உரிமையுடையவர் ஆவார் என்று எழுவினா-5-ற்கு விடை காண்கிறது.''

தீர்ப்பை முழுமையாக படிக்க () பதிவிறக்கம் செய்ய

No comments:

Post a Comment