பெயரை பிறப்பு பதிவேட்டில் சேர்க்க

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் பண்ருட்டி
முன்னிலை : திருமதி..உமாமகேஸ்வரி¸ பி.எஸ்ஸிபி.எல்
மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ பண்ருட்டி
திருவள்ளுவராண்டு 2046¸ மன்மத ஆண்டு¸ புரட்டாசித்திங்கள் 13 ஆம் நாள்
2015 ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30 ஆம் நாள் புதன்கிழமை
அசல் வழக்கு எண்.233 / 2015
சிவமணி வாதி
/எதிர்/
1. மாவட்ட ஆட்சித்தலைவர்¸ கடலூர்
2. வருவாய் வட்டாட்சியர்¸ பண்ருட்டி … பிரதிவாதிகள்

---------------------------------------------------------------------------------------------------------------
வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:
வாதியானவர் சம்மந்தமூர்த்தி மற்றும் ராசகுமாரி ஆகியோரின் மகனாவார். வாதியின் பெயர் சிவமணி என்பதாகும். அவர் 25.08.1994 ஆம் தேதி பிறந்தார். அவர் பிறந்த விபரத்தை அவரது பெற்றோர் வேகாக்கொல்லை கிராம அலுவலருக்கு தெரிவித்து¸ அவரது பிறப்பு 27.8.1994 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வாதியின் பிறப்பு சான்றிதழில் பெயர் ஏதம் குறிப்பிடப்படவில்லை. எனவே வாதியின் தகப்பனார் 2 ஆம் பிரதிவாதியிடம் வாதியின் பெயரை சேர்க்கக்கோரி 5.2.15 ஆம் தேதி மனு கொடுத்தார். ஆனால் வாதியின் பிறப்புபதிவானது 15 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டிருப்பதால்¸ தற்போது வாதியின் பெயரை பிறப்பு பதிவேட்டில் சேர்க்க இயலாது என பதில் கொடுத்துவிட்டார். வாதியின் பெற்றோர் படிப்பறிவு அற்றவர்கள். தற்போதுதான் வாதிக்கு அவரது பெயர் பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்படவில்லை என்ற விபரம் தெரியவந்தது. எனவே வாதியின் பெயரான சிவமணி என்பதை அவரது பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்ய 2 ஆம் பிரதிவாதிக்கு செயலுறுத்துக்கட்டளை பிறப்பித்து உத்தரவிட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------
வாதி தரப்பில் வா.சா..1 முதல் வா.சா..4 வரையிலான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. வா.சா..1 என்பது 18.09.2004 ஆம் தேதி வழங்கப்பட்ட வாதியின் பிறப்புச்சான்று நகல் ஆகும். வா.சா..2 என்பது 19.02.2015 ஆம் தேதி பிரதிவாதி கொடுத்துள்ள பதில் ஆகும். வா.சா..3 என்பது 16.06.2010 ஆம் தேதியிட்ட வாதியின் பள்ளி மாற்றுச்சான்றிதழின் நகல் ஆகும். வா.சா..4 என்பது வாதியின் குடும்ப அட்டை நகல் ஆகும். வா.சா..2 ஐ பரிசீலனை செய்யும்பொழுது¸ மேற்படி வாதியின் பெயரை பதிவு செய்து சான்றிதழ் வழங்க இயலாது என 2 ஆம் பிரதிவாதி அலுவலகத்தால் மேற்குறிப்பு வழங்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. வா.சா..1 ஐ பரிசீலனை செய்யும்போது அதில் 25.08.1994 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்திருப்பதும்¸ அதில் பெற்றோர் பெயர் சம்மந்தமூர்த்தி¸ ராஜகுமாரி என பதிவு செய்யப்பட்டிருப்பதும் ஆனால் அதில் குழந்தையின் பெயர் குறிப்பிடப்படாமல் இருப்பதும் தெரியவருகிறது. வா.சா..3 ஆவணத்தை பரிசீலனை செய்யும்போது வாதியின் பெயர் சிவமணி என்பதும்¸ அவர் 25.08.1994 ஆம் தேதி பிறந்திருப்பதும்¸ தகப்பனார் பெயர் சம்மந்தமூர்த்தி என்பதும் தெரியவருகிறது. வா.சா..4 ஆக வாதியின் குடும்ப அட்டை நகலை பரிசீலனை செய்து பார்க்கும்போது அதில் வாதியின் பெயரும்¸ அவரது தகப்பனார் பெயர் சம்மந்தமூர்த்தி மற்றும் தாயார் பெயர் ராஜகுமாரி என்பதும் தெரியவருகிறது. வா.சா.1 தனது சாட்சியத்தில் வழக்குரையையொட்டி சாட்சியம் அளித்துள்ளார். எனவே மேற்படி வா.சா.1-ன் சாட்சியம் மற்றும் வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா..1 முதல் வா.சா..4 வரையிலான ஆவணங்களிலிருந்தும்¸ வாதியின் பெயர் சிவமணி என்பதும்¸ அவர் 25.08.1994 ஆம் தேதி பிறந்திருப்பதும் தெரியவருகிறது. மேலும் மேற்படி வாதியின் பெயரை பிறப்பு பதிவு சான்றிதழில் சேர்க்க பிரதிவாதிகள் தரப்பில் கடுமையான ஆட்சேபனைகள் முன்வைக்கப்படவில்லை. மேலும் இந்நீதிமன்றம் வழங்கும் உத்தரவுக்கு தாங்கள் கட்டுப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட பரிசீலனைகளின் அடிப்படையிலும்¸ வா.சா..1 முதல் வா.சா..4 வரையிலான ஆவண சாட்சியங்கள் மற்றும் வா.சா.1-ன் சாட்சியத்திலிருந்தும் வாதி கோரியுள்ள செயலுறுத்துக்கட்டளை பரிகாரம் அவருக்கு கிடைக்கத்தக்கது என முடிவு செய்து எழுவினா 1-க்கு வாதிக்கு சாதகமாக விடை காணப்படுகிறது.

தீர்ப்பை முழுமையாக படிக்க (பதிவிறக்கம் செய்ய

No comments:

Post a Comment