மோட்டார் வாகனச் சட்டம் பிரிவுகள் 140¸ மற்றும் 166 உடன் இணைந்த விதி 3(1)

இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றம்¸ மதுரை
முன்னிலை: திரு. ஆர். நம்பி பி.காம்எம்.எல்
இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி¸ மதுரை
2015ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 5ம் நாள் வியாழக்கிழமை
இயக்க ஊர்தி விபத்து கோருரிமை மனு எண்.810-2012

செந்தாமரைமனுதாரர்
எதிராக
1..முருகன்
2.கிளை மேலாளர்¸
IFFCO-TOKYO ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
92¸ பிரித்தம் பிளாஸா தரைத்தளம்¸
சந்திரகாந்தி நகர்¸ பொன்மேனி¸ மதுரை-16 – எதிர்மனுதாரர்கள்
ஆணையுரை

01-04-2012ந் தேதியன்று 17-00 மணி அளவில் மதுரை¸ சாந்தி நகர்¸ கூடல்நகர் பாலத்தின் அருகே நடந்த விபத்தில் காயமுற்ற மனுதாரர் இழப்பீடாக ரூ.7¸00¸000/- வழங்கக் கோரி மோட்டார் வாகனச் சட்டம் பிரிவுகள் 140¸ மற்றும் 166 உடன் இணைந்த விதி 3(1)ன் கீழ் 30-4-2012ந் தேதியன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

2).மனுதாரர் தரப்பு மனுஉரையின் விவரங்கள் பின்வருமாறு- மனுதாரர் கடந்த 1-4-2012ந் தேதியன்று 17-00மணிக்கு மனுதாரர் அவரது கணவருடன் டி என் 59 ஜெ 0243 பதிவெண் கொண்ட இரு சக்கர வாகனமான ஸ்பிளண்டர் ப்ளஸ் வண்டியில் தெற்கிலிருந்து வடக்காக வந்து கொண்டிருக்கும்போது¸ ரோட்டின் குறுக்காக நாய் ஒன்று வந்ததும்¸ மனுதாரரின் கணவர் திடீரென்று பிரேக் போட்டதில் மனுதாரர் கீழே விழுந்து மனுதாரர் பலத்த காயமுற்றார். உடனடியாக மனுதாரர் மதுரை பிரித்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து மதுரை கூடல் நகர் காவல்நிலையத்தார் குற்ற எண் 130-2012 ஆக ... பிரிவு 279 மற்றும் 337-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரரால் விபத்திற்கு பின்னர் முன்போல் வேலைகளைச் செய்ய இயலவில்லை. விபத்தானது 1ம் எதிர்மனுதாரரின் கவனக் குறைவினாலும்¸ அஜாக்கிரதையினாலும் ஏற்பட்டுள்ளது. மேற்படி வாகனம் 2ம் எதிர்மனுதாரரிடம் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் 1 மற்றும் 2 எதிர்மனுதாரர்கள் மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்கக் கடமைப்பட்டவர்கள். ஆகவே மனு அனுமதித்துக் கிடைக்க வேண்டும்.

3).2ம் எதிர்மனுதாரர் தரப்பு எதிருரையின் விவரங்கள் பின்வருமாறு-
மனு சட்டப்படியும்¸ சங்கதிப்படியும் நிலை நிற்கத்தக்கவையல்ல. மனுவில் குறிப்பாக ஒப்புக்கொள்ளக்கூடிய ஒருசில சங்கதிகள் தவிர மற்றவை மறுக்கப்படுகின்றன. அவற்றை மனுதாரரே நிரூபிக்க கடமைப்பட்டுள்ளார். விபத்திற்கு மனுதாரரின் கவனக்குறைவும்¸ அஜாக்கிரதையுமே காரணமாகும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இந்த 2ம் எதிர்மனுதாரர் இழப்பீடு கொடுக்க எவ்விதத்திலும் கடமைப்பட்டவரில்லை. மனுதாரரின் கணவர் உரிய சாலை விதிகளைப் பின்பற்றி வாகனத்தை ஓட்டி வருகையில்¸ குறுக்காக நாய் வந்ததினால் விபத்தை தவிர்க்க பிரேக் போடப்பட்டது. மனுதாரர் வாகனத்தின் பின்னால் வரும்போது ஜாக்கிரதையுடன் பிடிமானத்துடன் கவனமாக அமர்ந்து வந்திருந்தாரேயானால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது. விபத்திற்கு மனுதாரரின் அஜாக்கிரதையும் காரணமாகும். எனவே இந்த எதிர்மனுதாரர் மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்கக் கடமைப்பட்டவரில்லை. மனுதாரின் வயது¸ ஏற்பட்டதாய் கூறப்படும் காயங்கள் அவற்றின் தன்மை¸ சிகிச்சைச்செலவு¸ ஊனம் ஆகிய அனைத்தும் இழப்பீட்டிற்காக மிகையாக கூறப்பட்டுள்ளபடியால்¸ அவை அனைத்தும் மனுதாரால் நிரூபிக்கப்பட வேண்டும். மனுதாருக்கு ஏற்பட்டுள்ள சாதாரண காயங்களுக்கு கோரியுள்ள இழப்பீடு அதிகப்படியானது. மனுதாரர் கோரும் வட்டிவிகிதம் அதிகமானது. எனவே மனு செலவுத் தொகையோடு இந்த எதிர்மனுதாரைப் பொறுத்து தள்ளுபடி செய்யப்படவேண்டும்.

4). இந்த மனுவில் தீர்வுக்குரிய பிரச்சினைகள் பின்வருமாறு ¸--
1). இந்த விபத்து யாருடைய கவனக்குறைவினால் நிகழ்ந்துள்ளது¸ 2). மனுதாரருக்கு வழங்கக்கூடிய இழப்பீட்டுத் தொகை எவ்வளவு¸
3). இந்த இழப்பீட்டுத் தொகையை யார் வழங்க வேண்டும் ¸

5). இந்த மனுவில் மனுதாரர் தரப்பில் 2 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 6 வரையிலான சான்றாவணங்கள் குறியிடப்பட்டுள்ளன. எதிர்மனுதாரர்கள் தரப்பில் வாய்மொழிசாட்சியமோ¸ சான்றாவணங்களோ முன்னிடப்படவில்லை.

6). பிரச்சினை எண் 1
மனுதாரர் தனக்கு சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு இழப்பீடு கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அவர் தன்னை சா 1 ஆக விசாரித்துக் கொண்டுள்ளார். அவர் தன் சாட்சியத்தில் 1- 4-2012 அன்று மாலை பாத்திமா கல்லூரி பஸ் நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கி தன்னுடைய கணவர் முருகன் கொண்டு வந்திருந்த இரு சக்கர வாகனம் பதிவு எண். டி என் 59 ஜே 0243 என்ற வாகனத்தில் பின்னால் அமர்ந்து வீட்டிற்கு ஆணையூர்இமயம் செல்லும்போது மதுரை¸ கூடல்நகர் பாலத்தில் சாந்தி நகர் அருகே தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வந்து கொண்டிருந்தபோது மாலை 5 மணி அளவில் இரு சக்கர வாகனத்தின் முன்னால் திடீரென்று ஒரு நாய் குறுக்கே சென்றதால் தன் கணவர் பிரேக் போட்டதில் நிலைதடுமாறி தாங்கள் இருவரும் கீழே விழுந்து விட்டதாகவும்¸ அந்த விபத்தில் தனக்கு வலது முழங்கை¸ இடது பக்க முழங்கால்¸ இடது பக்க முக எலும்பு முறிவு ஏற்பட்டது என்றும்¸ இது குறித்து மதுரை¸ கூடல்நகல் போலீசார் குற்ற எண் 130-12 ஆக வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும்¸ அந்த முதல் தகவல் அறிக்கை சா .1 என்றும்¸ ஆக இந்த விபத்தானது இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற தன்னுடைய கணவரின் கவனக்குறைவினால் ஏற்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

7). இந்த மனுவில் 2ம் எதிர்மனுதாரரான IFFCO-TOKYO ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் சார்பாக முன்னிலைப்பட்ட அறிவார்ந்த வழக்குரைஞர் மனுதாரர் இந்த மனுவில் முதலில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறார் என்றும்¸ அவர் பிரிவு 166ன்கீழ் தன்னுடைய கோரிக்கையை முன் வைக்கின்றாரா¸ அல்லது பிரிவு 140ன்படிNo fault liability”என்ற அடிப்படையில்Negligence” நிரூபிக்காமல் இழப்பீடு பெற விரும்புகிறாரா¸ என்பதை எடுத்துரைக்கத் தவறியிருக்கிறார் என்றும்¸ ஏனெனில்¸ இந்த மனுவின் எந்தப் பகுதியிலும் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற தன்னுடைய கணவரின் கவனக்குறைவு மற்றும் அதிவேகத்தினால் இந்த விபத்து நிகழ்ந்ததாக எந்தவொரு விசயங்களும் எடுத்துரைக்கப்படவில்லை என்றும்¸ அதுபோல முதல்விசாரணை நிரூபண வாக்குமூலத்தில் கவனக்குறைவு¸ அதிவேகம் குறித்து எந்த விவரமும் இந்த மனுதாரரால் சொல்லப்படவில்லை என்றும்¸ விபத்து குறித்து கொடுக்கப்பட்ட புகாரிலும்¸ அது குறித்து பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும் கவனக்குறைவு பற்றியோ¸ அதிவேகம் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை என்றும்¸ இந்த சூழ்நிலையில் மனுதாரரின் குறுக்குவிசாரணையைக் காண்பது அவசியமாக உள்ளது என்றும்¸ அவர் தன்னுடைய குறுக்குவிசாரணையிலேயே தன் கணவர் மிகவும் கவனமாகத்தான் வாகனத்தை ஓட்டிச் சென்றார் என்று எடுத்துரைக்கின்றார் என்றும்¸ ஆக கவனக்குறைவாக செயல்பட்டிருக்கும் சூழ்நிலையில்தான் பிரிவு 166 மோட்டார் வாகனச் சட்டப் பிரிவின்கீழ் மனுதாரர் இந்தக் கோரிக்கை முன் வைக்க இயலும் என்றும்¸ அவ்வாறு இல்லாதபட்சத்தில்¸ வேண்டுமானால் பிரிவு 140 அல்லது 163() பிரிவின்கீழ்தான் மனுதாரர் தன் கோரிக்கையை வலியுறுத்திக் கொள்ள வேண்டுமென்று வாதிட்டார்.
 8). இதுகுறித்து 2ம் எதிர்மனுதாரர் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்ட மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆர்.2007 சுப்ரீம் கோர்ட் பக்கம் 1609¸ சிவில் அப்பீல் நம்பர்.5825/2006ல் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்எதிராகமீனாவரியாள் மற்றும் பலர் ஆகியோர்களுக்கிடையே நடந்த வழக்கில் 2-4-2007ந் தேதியன்று பிறப்பிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பில்¸ பாரா 24ல் Our Honourable Supreme Court has clearly held that,

Motor Vehicles Act, 1988 by introducing Section 163A of the Act providing for payment of compensation notwithstanding anything contained in the Act or in any other law for the time being in force that the owner of a motor vehicle or the authorised insurer shall be liable to pay in the case of death or permanent disablement due to accident arising out of the use of the motor vehicle, compensation as indicated in the Second schedule to the legal heirs or the victim, as the case may be and in a claim made under sub-section (1) of Section 163A of the Act, the claimant shall not be required to plead or establish that the death or permanent disablement in respect of which the claim has been made was due to any wrongful act or neglect or default of the owner of the vehicle concerned. Therefore the victim of an accident or his dependants have an option either to proceed under section 166 of the Act or under Section 163A of the Act. Once they approach the Tribunal under section 166 of the Act, they have necessarily to take upon themselves the burden of establishing the negligence of the driver or owner of the  vehicle concerned. But if they proceed under section 163 A of the Act , the compensation will be awarded in terms of the Schedule without calling upon the victim or his dependants to establish any negligence or default on the part of the owner of the vehicle or the driver of the vehicle”.

என்று முடிவு கண்டிருக்கும் தீர்ப்பை வலியுறுத்தி மனுதாரர் இந்த மனுவிற்கு தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த தவறியிருக்கிறார் என்றும்¸ பிரிவு 163()ன்படி அவர் தன் கோரிக்கையை முன் வைத்திருப்பாரேயானால்¸ கவனக்குறைவாக வாகனம் ஓட்டப்பட்டது குறித்து நிரூபிக்கத் தேவையில்லை என்றும்¸ No fault liability” ன்கீழ் இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வாதிட்டார். இதற்கு ஆதரவாக .சா.1ன் குறுக்கு விசாரணையை அவர் எடுத்துரைத்தார். அதில்
நான் என் கணவரோடு இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கொண்டு வந்தேன். அந்த வாகனத்தில் நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு நாய் குறுக்கே வந்தது என்றால் சரிதான். அவ்வாறு திடீரென்று ஒரு நாய் குறுக்கே வந்தால் என்ன பண்ண வேண்டுமென்று கேட்டால் பிரேக் போட வேண்டும். அவ்வாறு என் கணவர் திடீரென்று பிரேக் போடும்போது நான் வண்டியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தேன் என்றால் சரிதான். அவ்விதம் பிரேக் போடவில்லையென்றால் பெரிய விபத்து நிகழ்ந்திருக்கும் என்றால் சரிதான். என் கணவர் திடீரென்று பிரேக் போட்டதில் எந்தவிதத் தவறும் இல்லையென்றால் சரிதான். என் புகாரில் என் கணவர் கவனக்குறைவாகவோ¸ அதிவேகமாகவோ ஓட்டிச் சென்றார் என்று சொல்லவில்லை என்றால் சரிதான். என் கணவர் மீது எந்தத் தவறுமில்லை என்பதால் நான் கொடுத்த புகாரின் மீது போலீசார் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்காதது சரியானதுதான் என்றால் சரிதான். என்று சாட்சியமளித்திருக்கிறார்.
ஆக எதிர்மனுதாரரின் வாதத்திற்கேற்ப¸ மனுதாரரின் கணவரின் கவனக்குறைவு இருந்ததாகவோ¸ அதிவேகம் இருந்ததாகவோ¸ அதனால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவோ எந்தவொரு சங்கதிகளையும் மனுதாரர் தரப்பில் எடுத்துரைக்கவில்லை. மாறாக மனுதாரரின் கணவர் மிகவும் கவனமாகத்தான் வாகனத்தை ஓட்டினார் என்பதுபோலதான் மனுதாரர் சாட்சியமளித்திருக்கிறார்.

9). மனுதாரரின் இந்த நிலைப்பாடு குறித்து மனுதாரர் தரப்பு வாதத்தைக் காண்கின்றபோது¸ அவர் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் 2014 சி ஜே பக்கம் 469 தீர்ப்பைச் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார். அது அன்பழகன் மற்றும் பலர்மேல்முறையீட்டாளர்கள்--எதிராக-- வி.சங்கர் மற்றும் ஒருவர் ஆகியோர்களுக்கிடையே நடந்த சி.எம்.. 4107/08 மற்றும் 2227/09 வழக்கில் 15-10-2012ந் தேதி மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாகும்.

In which our Honourable High Court rendered the following verdict: “ Motor Vehicles Act, 1988, Section 166Claim application – F.I.R. Nonlodging of – Failure to get FIR registered is not fatal to claim application – F.I.R or police investigation is not a condition precedent for awarding the claim and the claim could be awarded if the same is proved by admissible evidence”
மேற்படி தீர்ப்பில் சொல்லப்படும் சாராம்சத்தின்படி விபத்து குறித்து முதல்தகவல் அறிக்கையோ¸ புலன் விசாரணை அறிக்கையோ தேவை என்ற கண்டிப்பு இல்லை என்றும்¸ அதே சமயம் போதுமான சாட்சியம்¸ விபத்து கவனக்குறைவினால்தான் நிகழ்ந்துள்ளது என்று மனுவில் இருந்தால் இழப்பீடு வழங்கலாம் என்று தீர்வு கண்டுள்ளது. இதை வலியுறுத்தி மனுதாரர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பின் சாராம்சம் குறித்து 2ம்எதிர்மனுதாரர் தரப்பில் முதல் தகவல் அறிக்கையும்¸ புலன் விசாரணை அறிக்கையும் தேவையில்லை என்பது ஒப்புக் கொள்ளப்படும் சங்கதி என்றும்¸ ஆனால் இந்த விபத்து வாகன ஓட்டுநரின் கவனக்குறைவினால்தான் நிகழ்ந்தது என்பதற்குப் போதிய சாட்சியம் இருந்தால் போதும் என்று இந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கும் வகையில் மனுதாரர் தரப்பில் இந்த விபத்து தன்னுடைய கணவரின் கவனக்குறைவினால்தான் நிகழ்ந்தது என்பதற்கு எவ்விதமான சாட்சியமும்¸ சான்றாவணங்களுமில்லை என்பதால்தான் ஆட்சேபிப்பதாக எடுத்துரைக்கப்பட்டது.

10). மனுதாரர் தரப்பில் 2009 சி ஜே பக்கம் 1725 - 2009 ACJ page 1725 in C.A.No.2538 of 2009 arising out of S.L.P. (C)No.280 of 2006 decided on 15.4.2009 between Bimla Devi and others – Appellants – versus – Himachal Road Trans. Corpn and others – Respondents, Judgments rendered by our Honourable Supreme Court Bench on 15-4-2009, in

Strict proof of accident caused by a particular bus in a particular manner may not be possible to be done by the claimants claimants were merely to establish their case on the touchstone of preponderance of probability standard of proof beyond reasonable doubt could not have been applied and apparently there was no reason to falsely implicate the driver and conductor of the bus Held: driver of the bus was negligent and responsible for the accident”
 
என்று முடிவு கண்டிருக்கும் தீர்ப்பை வலியுறுத்தி வாதிட்டார். இதுகுறித்து 2ம் எதிர்மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் எழுப்பியிருந்தபோதிலும்¸ மேற்படி தீர்ப்பினை காண்கின்ற சூழ்நிலையில்¸ இந்த மனுவின் சங்கதிகளையும் விபத்து நடந்திருக்கும் நிகழ்வைக் காண்கின்றபோது¸ மனுதாரர் தன் கணவரான முருகன் அவருடைய இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது பின்னால் அமர்ந்து சென்றிருப்பதையும்¸ அவ்விதம் செல்லும்போது திடீரென்று நாய் குறுக்கே வந்ததால் மனுதாரரின் கணவர் நிலைதடுமாறி பிரேக் போடும்போது கீழே விழுந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலையைக் காண்கின்றபோது¸ மனுதாரரின் சாட்சியப்படி அவரது கணவர் மிகக் கவனமாகத்தான் சென்றார் என்று குறுக்குவிசாரணையில் 2ம் எதிர்மனுதாரர் தரப்பில் கேள்வி கேட்டு பதில் பெற்றிருந்தபோதிலும்¸ இந்த விபத்தின் நிகழ்வைக் காணும்போதுas aforesaid in the verdict rendered by our Honourable Supreme Court 2009 ACJ page 1725 and to establish their case on the touchstone of preponderance of probability, standard of proof beyond reasonable doubt could not have been applied and apparently there was no reason to falsely implicate the driver and conductor of the bus Held: driver of the bus was negligent and responsible for the accident” என்று முடிவு காணப்பட்டிருப்பதற்கிணங்க¸ இந்த விபத்து சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மனுதாரரின் கணவர் திடீரென்று பிரேக் போட்டார் என்ற சங்கதிகள்¸ விபத்திற்கு மனுதாரரின் கணவரின் கவனக்குறைவே காரணம் என்பதை மிகத் தெளிவாக தெளிவுபடுத்துகின்றது. மனுதாரரின் கணவர் கவனமாகச் சென்றிருந்தால் சாதுர்யமாக விபத்தை தடுத்திருக்கலாம். கீழே விழுந்திருக்க வேண்டியதில்லை. மனுதாரரின் படிப்பறிவின்மையால் சட்டத்தின் நுணுக்கத்தினை தெரிந்து கொள்ளவில்லை என்பதற்காக மனுதாரரின் கணவர் கவனக்குறைவுடன் செயல்பட்டார் என்ற விவரத்தைப் புறந்தள்ள இயலாது. ஆக இந்த மனுவில் மனுதாரர் தன் கணவர் இந்த விபத்தை நிகழ்த்தினார் என்றால் அவருக்கு குற்றவழக்கில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற வகையில் அவர் அஞ்சி சரியாகத்தான் வாகனத்தை ஓட்டிச் சென்றார் என்று சாட்சியமளித்திருப்பதைக் காணும் சூழ்நிலையில் சங்கதிகளின் அடிப்படையில் காணும்போது இந்த விபத்து மனுதாரரின் கணவரின் கவனக்குறைவினால்தான் நிகழ்ந்துள்ளது என்பது தெளிவாகின்றது. ஆக இந்த விபத்து மனுதாரரின் கணவரின் கவனக்குறைவினால்தான் நிகழ்ந்துளது என்று பிரச்சினை எண் 1க்கு தீர்வு காணப்படுகின்றது.

11). பிரச்சினை எண்.2
மனுதாரர் இந்த விபத்து நிகழ்ந்தவுடன் மதுரை¸ மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் அருகில் அமைந்திருக்கும் பிரித்தி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டதாகவும்¸ 1-4-2012 முதல் 7-4-2012 வரை உள்நோயாளியாக சிகிச்சை பெற்றதாகவும்¸ அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கான விடுவிப்புச் சம்மரி சா .2 ஆக குறியீடு செய்யப்பட்டிருப்பதைக காண முடிகின்றது. மனுதாரருக்கு மருத்துவச் செலவு செய்யப்பட்டது குறித்து சா .3 மருத்துவ பில்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரருக்கு இந்த விபத்தினால் ஏற்பட்டதாகக் கூறும் காயங்கள் குறித்து ஏற்பட்டிருக்கும் பகுதி நிரந்தர ஊனத்தை உறுதி செய்ய மனுதாரர் தரப்பில் டாக்டர்.சிதம்பரம் சா 2 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். அவர் தன் சாட்சியத்தில் மனுதாரருக்கு வலது மேல் கையில் எலும்பு உடைந்து¸ அந்த எலும்புக்கு அருகில் ரேடியல் நரம்பு செயல் இழந்துள்ளது என்றும்¸ அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளே உலோகத்தகடு மற்றும் திருகாணிகள் போடப்பட்டுள்ளது என்றும்¸ அவருக்கு ஊனம் கணித்த வகையில் 20% ஊனம் ஏற்பட்டிருப்பதாகவும்¸ அந்த ஊனச் சான்றிதழ் சா ..5 ஆகுஜம் ஊனம் கணிப்பதற்கு எடுக்கப்பட்ட நுண்கதிர்படம் சா ..6 ஆகும் என்றும் சாட்சியமளித்திருக்கிறார். ஆக அவரது சாட்சியத்தின்படி மனுதாரருக்கு பகுதி நிரந்தர ஊனம் 20% ஏற்பட்டுள்ளது என்பதைக் காண முடிகின்றது. ஊனத்தின் சதவிகிதம் குறித்து 2ம் எதிர்மனுதாரர் தரப்பில் வெகுவாக ஆட்சேபிக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சாட்சியப்படி உலோகத் தகடு மற்றும் திருகாணி பொருத்தப்பட்டுள்ளது என்பதும்¸ எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதும் உறுதி செய்யப்படுவதால் மனுதாரருக்கு மனுவில் கோரியபடி அவருக்கு இழப்பீடு வழங்கத்தக்கதா என்பது குறித்து கீழ்க்காணும் வகையில் தீர்மானிக்கப்படுகின்றது.

12). மனுதாரர் இந்த மனுவில் போக்குவரத்துச் செலவு வகைக்கு ரூ.5000/- கோரியுள்ளார். விபத்து நடந்த இடமான கூடல்நகரிலிருந்து மதுரை மாட்டுத்தாவணி அருகில் உள்ள பிரித்தி மருத்துவமனைக்குமிடையே உள்ள தூரத்தைக் காணும் வகையில்¸ மனுதாரர் கோரியிருக்கும் தொகை அதிகப்படியானது என்பதால்¸ போக்குவரத்துக்கு என்ற தலைப்பின் கீழ் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.1000/- வழங்கலாம் என்று இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது. மனுதாரர் ஊட்டச் சத்து வகைக்கு ரூ.10¸000/- இழப்பீடு கோரியிருக்கிறார். மனுதாரருக்கு ஏற்பட்டிருக்கும் ஊனத்தின் தன்மையை கருதி அவர் பெற்றுக் கொண்ட சிகிச்சையின் அடிப்படையில் அவர் கோரியிருக்கும் தொகை நியாயமானதே என்பதால் மனுதாரர் இழப்பீடாக கோரியுள்ள ரூ.10¸000/- ஊட்டச் சத்து வகைக்கு வழங்கலாம் என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. மனுதாரர் சேதாரம் என்ற வகையில் ஆடை மற்றும் தங்கச்செயின் வகைக்கு ரூ.53¸000/- கோரியிருக்கின்றார். மனுதாரர் தான் தங்கச் செயின் அணிந்திருந்ததாகவோ¸ அதை இந்த விபத்தில் தொலைத்து விட்டதாகவோ எந்த ஆதாரங்களுமில்லை. அதே சமயம் இந்த விபத்தில் அவர் அணிந்திருந்த ஆடைகள் சேதமேற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்ற வகையில் ஆடை சேதமடைந்த வகைக்கு இழப்பீடாக ரூ.1000/-வழங்கலாம் என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. மனுதாரர் மருத்துவச் செலவு வகைக்காக மனுதாரர் இழப்பீடாக ரூ.1லட்சமும்¸ எதிர்கால மருத்துவச் செலவுக்கு ரூ.1லட்சமும் கோரியுள்ளார். மனுதாரர் மருத்துவச் செலவுக்காக செலவு செய்த வகையில் சா .3 பில்களை இணைத்திருக்கின்றார். அதில் ரூ.71926-46 செலவு செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 2ம் எதிர்மனுதாரர் வாதப்படி ரூ.8856 மற்றும் ரூ.7555/- ஆகிய இரு தொகைகளுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லை என்று ஏற்படுத்தும் ஆட்சேபத்தில் நியாயம் இருப்பதைக் காண முடிகின்றது. அந்த வகையில் ரூ.16411/- மேற்படி பில் தொகையான ரூ.71926-46ல் கழித்தது போக மீதம் ரூ.55¸515-46 மருத்துவச் செலவு என்ற வகைக்கு இழப்பீடாக வழங்கலாம் என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.மனுதாரர் வலி¸ மற்றும் வேதனை என்ற தலைப்பின்கீழ் இழப்பீடாக ரூ.3லட்சம் கோரியுள்ளார். காயத்தின் தன்மை மற்றும் வயதைக் கருத்தில் கொண்டு வலி மற்றும் வேதனைக்கு இழப்பீடாக ரூ.15¸000/- வழங்கலாம் என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. மனுதாரர் அதிர்ச்சி மற்றும் வலி என்ற தலைப்பின் கீழ் மனுதாரர் இழப்பீடாக ரூ.3லட்சம் கோரியுள்ளார். அதற்கான சூழ்நிலை எதுவும் எழவில்லை என்பதைக் காண முடிகின்றது. எனவே அந்தத் தலைப்பின்கீழ் மனுதாரருக்கு இழப்பீடு எதுவும் வழங்க இயலாது என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கின்றது. மனுதாரருக்கு பகுதி நிரந்தர ஊனம் 20% ஊனம் ஏற்பட்டிருப்பதாக ஊனச் சான்றிதழ் வழங்கியிருக்கிறார். இது குறித்து எதிர்மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் ஏற்பட்டிருந்தபோதிலும்¸ அது அதிகமானது என்ற வகையில் 2ம் எதிர்மனுதாரர் தரப்பில் எவ்விதமான வாய்மொழி சாட்சியமோ¸ சான்றாவணங்களோ தாக்கல் செய்யப்படாத நிலையிலும் ஊனத்தின் தன்மையைக் கருதியும் மனுதாரருக்கு பகுதி நிரந்தர ஊனம் 20% ஏற்பட்டுள்ளதாகக் கூறுவது சரியானது என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கின்றது. மனுதாரர் தரப்பில் 1% ஊனத்திற்க்கு ரூ¸3000/- இழப்பீடு வழங்க வேண்டுமென்று கோரி¸ மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் 2013(2) TNMAC 583 தீர்ப்பைச் சுட்டிக் காட்டினார். அது National Insurance Co.Ltd rep by its Branch ManagerAppellant – versusG. Ramesh. 2. P.Yoshuva – Respondents in CMA. No.249 of 2013 and M.P.No.1 of 2013 dated 22-2-2013ன் தீர்ப்பாக அமைந்திருக்கிறது. இதை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 1% ஊனத்திற்க்கு ரூ¸3000/- இழப்பீடு வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பு குறித்து 2ம் எதிர்மனுதாரர் தரப்பில் இது டிவிசன் பென்ஞ்ச் தீர்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் தன்னிச்சையாக வழங்கப்பட்டிருக்கிறது என்றும்¸ இந்தத் தீர்ப்பு அந்த பிரத்யேக வழக்கிற்கு மட்டுமே பொருந்தத்தக்கது என்றும்¸ அதை மற்ற வழக்குகளுக்கு பொருந்துவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஆட்சேபித்தார். இந்த மனுவில் மனுதாரரின் வயதைக் காண்கின்றபோது அவருக்கு 42 என்ற அடிப்படையில் சுட்டிக்காட்டப்பட்ட தீர்ப்பில் மனுதாரரின் வயது 23 அவர் ஒரு விற்பனை பிரதிநிதி என்ற வகையில் அந்தத் தொகை வழங்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. மனுதாரர் ஒரு House Wife ஆக இருப்பதாலும்¸ 42 வயதைக் கடந்துவிட்ட நிலையிலும்¸ அவருக்கு 1% ஊனத்திற்க்கு ரூ.2000/- என்ற வகையில் 20% ஊனத்திற்க்கு ரூ.40¸000/- பகுதி நிரந்தர ஊனத்திற்கான இழப்பீடாக இந்நீதிமன்றம் வழங்கலாம் என்று தீர்மானிக்கின்றது. மனுதாரர் இந்த மனுவில் கோரியிருக்கும் கோரிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் நியாயமான மேலே கண்டபடி இழப்பீடு வழங்கியிருப்பதால் மனுவில் கோரியிருக்கும் இதர தலைப்புகளின்கீழான கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றது.
மேற்சொன்ன வகையில்
போக்குவரத்துச் செலவுக்காக        ரூ.1¸000/-
கூடுதல் ஊட்டச்சத்துணவுக்காக   ரூ.10¸000/-
ஆடை சேதமடைந்த இழப்பிற்காக ரூ.1¸000/-
மருத்துவச் செலவிற்காக               ரூ.55¸515-46
வலி மற்றும் வேதனைக்காக         ரூ.15¸000/-
பகுதி நிரந்தர ஊனத்திற்காக          ரூ.40¸000/-
(20 % X Rs.2000)
       --------------
மொத்தம்                                        ரூ..122515-46
        --------------
ஆக மொத்தம் மனுதாருக்கு இழப்பீடாக ரூ..122515-46 கிடைக்கக் கூடியது என்று இந்நீதிமன்றத்தால் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுகிறது.
13). பிரச்சினை எண் 3
விபத்தில் சம்பந்தப்பட்ட மனுதாரரின் கணவரின் வாகனம் 2ம் எதிர்மனுதாரர் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து எவ்விதமான மறுப்பும் இல்லாததால்¸ மனுதாரருக்கு வழங்கப் பட்டிருக்கும் இழப்பீட்டுத் தொகையை 2ம் எதிர்மனுதாரரே மனுதாரருக்கு வழங்கக் கடமைப்பட்டிருக்கிறார் என இந்த பிரச்சினை எண் 3க்கு தீர்வு காணப்படுகிறது.

14). இறுதியாக¸ இந்த மனு செலவு தொகையோடு பகுதியாக அனுமதிக்கப்பட்டு மனுதாரருக்கு 2ம் எதிர்மனுதார் இழப்பீடாக ரூ..122515-46 செலுத்த வேண்டுமென்றும்¸ மேற்படி தொகைக்கு மனு தாக்கலான நாள் முதல் தொகை செலுத்தப்படும் நாள் வரை 7.5% வருட வட்டி சேர்த்து 1மாத காலத்திற்குள் 2ம் எதிர்மனுதார் நீதிமன்றத்தில் வைப்பீடு செய்துவிட வேண்டும் என்றும்¸ மேற்படி தொகையை மனுதார் இந்த மனு செலவு தொகை¸ வட்டி தொகையோடு சேர்த்து பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும்¸ கேட்புத்தொகைக்கும் வழங்கு தொகைக்கும் உண்டான வேறுபட்ட நீதிமன்றக் கட்டணத்தை மனுதார் நீதிமன்றத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும்¸ வழக்கறிஞர் கட்டணம் ரூ.5450/- என்றும் உத்தரவிடப்படுகிறது.
 என்னால் சுருக்கெழுத்து-தட்டச்சருக்கு சொல்லப்பட்டு¸ அவரால் கணிணியில் விரிவாக்கம் செய்யப்பட்டு¸ என்னால் சரி பார்க்கப்பட்டு¸ பின்னர் இன்று 2015ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 5ம் நாள் என்னால் அவையறிய பகரப்பட்டது.

இரண்டாவது சார்பு நீதிபதி¸
மதுரை.No comments:

Post a Comment