குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை | Section 7(1)(a)(ii) in The Essential Commodities Act, 1955

நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 1 சிவகங்கை
முன்னிலை: திருமதி. வா. தீபா¸ எம்.எல்
நீதித்துறை நடுவர் எண்- 1
சிவகங்கை
2016 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ம் நாள் வெள்ளிக்கிழமை
ஆண்டுப்பட்டிகை வழக்கு எண் 211 / 2014

குற்றம் முறையிடுபவர் :
அரசுக்காக
காவல் ஆய்வாளர்
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை
மதுரை அலகு
குற்ற எண் 418-13

குற்றம் சாட்டப்பட்டவர் :

1. தங்கவேல்¸ (வயது 24-13)
.பெ. ரெங்கசாமிபிள்ளை.
காளியம்மன்கோவில் தெரு¸
வரிச்சியூர்¸
மதுரை.

2. மணிகண்டன்¸
விற்பனையாளர்.
வரிச்சியூர்¸
நியாயவிலைக்கடை¸
மதுரை.

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:
குற்றம் முறையிடப்பட்டது :
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவு 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடன் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 ன் கீழ்

குற்றம் வனையப்பட்டது :
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவு 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடன் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 ன் கீழ்

தண்டனை விவரம் : குற்றவாளி இல்லை

தீர்மானம் :
அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவு 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடன் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 ன் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்படவில்லை

தீர்ப்பு :
இறுதியாக அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவுகள். 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடன் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 ன் கீழ் சுமத்திய குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறியதால் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து கு.வி.மு.. பிரிவு 248(1)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தீர்ப்பளிக்கப்படுகின்றது. இவ்வழக்கில் சொத்துக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை


குற்ற இறுதி அறிக்கையின் சுருக்கம்
23.7.13-ம் தேதி 20.00 மணிக்கு மதுரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் மற்றும் போலீஸ் பார்ட்டியினர் பூவந்தி போலீஸ் செக்போஸ்டில் அத்தியாவசியப்பண்டங்கள் கடத்தல்¸ சம்மந்தமாக கண்காணித்து கொண்டிருந்த பொழுது 1 வது குற்றம்சாட்டப்பட்டவர் TN 59 AP 7068 எண்ணுள்ள ஆட்டோவில் தமிழக அரசு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1 லிட்டர் அளவு கொண்ட 98 பாக்கெட்டுகள் ரேசன் பாமாயில் (98 லிட்டர்) மதிப்பு ரூ.2450 உள்ளதை 1 வது எதிரியானவர் 2 வது எதிரி மூலமாக நியாயவிலைக்கடையில் முறைகேடாக வாங்கி¸ கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததாக எதிரியின் மீது பிரிவு 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடன் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 கீழ் குற்ற முறையிடுபவரால் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


2. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் கு.வி.மு.. பிரிவு173(7)ன் கீழ் இலவசமாக வழங்கப்பட்டது.

3. போதிய அவகாசம் கொடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குற்றம் பற்றி விளக்கிக் கூறி வினவப்பட்டபோது அவர்கள் குற்றத்தை மறுத்துள்ளார்கள். ஆவணங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவு 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடண் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 ன் கீழ் குற்றச்சாட்டுகள் வனைந்து விளக்கி வினவிய போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளி இல்லை என்று தெரிவித்துள்ளார்கள். அரசு தரப்பு சாட்சிகள் வழக்கு விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

4. அரசு தரப்பில் அ.சா.1 முதல் 3 வரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். .சா..1 மற்றும் அ.சா..6 சான்றாவணங்கள் குறியிடப்பட்டன.அத்தாட்சியில் உள்ள கையெழுத்து அ.சா..1 ஆகும். ஒப்புதல் வாக்குமூலத்திலுள்ள கையெழுத்து அ.சா..2 ஆகும். ஒப்புதல் ரசீது அ.சா..3 ஆகும். முதல் தகவல் அறிக்கை அ.சா..4 ஆகும். அத்தாட்சி அ.சா..5 ஆகும். ஒப்புதல் வாக்குமூலத்தின் அனுமதிக்கப்பட்ட பகுதி அ.சா..6 என்று குறியீடு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பு சாட்சி 1 மற்றும் 2 அரசு தரப்பில் சாட்சியம் அளித்துள்ளார்கள். .சா 2 தனது புலன் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாக சாட்சியம் அளித்து உள்ளார்.

5. பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாதகமான சங்கதிகளை குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவு 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடண் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 ன் கீழ் கு.வி.மு..313(1)()ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எடுத்துக்கூறி விளக்கி வினவிய போது அரசுத்தரப்பு சாட்சியம் பொய் என்றும் தங்கள் தரப்பில் விசாரிக்க சாட்சிகள் இல்லையென்றும் தெரிவித்துள்ளனர்.

6. இவ்வழக்கில் தீர்மானிக்க வேண்டிய பிரச்சினை யாதெனில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது பிரிவு 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடண் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 ன் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபித்துள்ளதா? இல்லையா? என்பதுதான்

7. பிரச்சனை
23.7.13 ம் தேதி 20.00 மணிக்கு மதுரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் மற்றும் போலீஸ் பார்ட்டியினர் பூவந்தி போலீஸ் செக்போஸ்டில் அத்தியாவசியப்பண்டங்கள் கடத்தல்¸ சம்மந்தமாக கண்காணித்து கொண்டிருந்த பொழுது 1 வது குற்றம்சாட்டப்பட்டவர் TN 59 AP 7068 எண்ணுள்ள ஆட்டோவில் தமிழக அரசு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1 லிட்டர் அளவு கொண்ட 98 பாக்கெட்டுகள் ரேசன் பாமாயில் (98 லிட்டர்) மதிப்பு ரூ.2450 உள்ளதை¸ 1 வது எதிரியானவர் 2 வது எதிரி மூலமாக நியாயவிலைக்கடையில் முறைகேடாக வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததாக அரசு தரப்பு வழக்கு.

8. அரசு தரப்பில் அ.சா.1 முதல் அ.சா3 வரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டு அ.சா..1 முதல் அ.சா..6 வரை சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் ஆவணங்களின் அடிப்படையிலும் வாய்மொழி சாட்சியத்தின் அடிப்படையிலும் அரசு தரப்பு வழக்கை நிருபித்துவிட்டதாக வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.

9. .சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்¸ தனது சாட்சியத்தில்¸ தான் பணியிலிருந்த பொழுது¸ பூவந்தி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மதியழகன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபொழுது¸ வரிச்சியூர் பிரிவு திருப்புவனம் ரோட்டில் டிஎன் 59 எபி 7068 என்ற ஆட்டோ வாகனம் வேகமாக வந்ததாகவும் அதனை அவர் தடுத்து நிறுத்தி தணிக்கை செய்த பொழுது¸ இரண்டு வெள்ளை நிற பிளாஸ்டிக் சாக்குகளில் 1 லிட்டர் அளவுள்ள 98 பாக்கெட்டுகள் ரே~ன் பாமாயில் இருந்ததாகவும்¸ அதனை கைப்பற்றி சம்பவ இடத்தில் வைத்து எதிரியை கைது செய்து ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாக சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் எதிரி தரப்பு குறுக்கு விசாரணையில்¸ " அந்த வாகனத்தில் 2 எதிரிகளும் அப்பொழுது இருந்தார்கள் என்று சொன்னால் சரிதான் . எதனடிப்படையில் எதிரிகளிடம் கைப்பற்றியது அரசுக்கு பாத்தியப்பட்ட குடிமைப்பொருள் என்று கேட்டால் மேற்படி பாமாயில் பாக்கெட்டுகளில் தமிழ்நாடு அரசு என்று உள்ளது ¸" என்று சாட்சியம் அளித்துள்ளார்.

10. .சா.2 ஆக விசாரிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு ஆய்வாளர் தனது சாட்சியத்தில்¸ தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பாமாயில் பாக்கெட்டுகள் 98 ஆகியவற்றை¸ தான் பகுப்பாய்வுக்கு வாங்கிக்கொண்டு ஒப்புதல் ரசீது வழங்கியதாக சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் எதிரி தரப்பு குறுக்கு விசாரணையில்¸ எங்களிடம் கொடுக்கப்படும் பாமாயில் 1 லிட்டரை சாம்பிளுக்கு அனுப்பிவிட்டு¸ மீதியை எங்களின் அரசுக்கணக்கில் பதிவு செய்து விடுவோம். அந்த ஆவணத்தை தற்பொழுது ஆய்வு செய்தால் கணக்கு சரியாக இருக்கும் என்றால் சரிதான் என்று சாட்சியம் அளித்துள்ளார்.

11. .சா.3 விசாரணை அதிகாரி தனது சாட்சியத்தில்¸ சம்பவ இடத்தில் வைத்து 1 ம் எதிரியை மட்டும் கைது செய்ததாகவும்¸ எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாகனம் சிவகங்கை மாவட்ட வருவாய்துறை அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் இந்நீதிமன்றதில் தாக்கல் செய்யப்படவில்லை என்று சாட்சியம் அளித்துள்ளார்.

12. மேற்கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் பார்க்கும் போது¸ இந்த வழக்கில் சாட்சியாக விசாரிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசு பணியை செய்பவர்கள். அவர்கள் சொன்ன சாட்சியானது¸ தனது அரசு பணியை செய்யும் போது சொன்ன சாட்சியாகவே கருதமுடியும். .சா.1 ன் சாட்சியத்தில்¸ சம்பவத்தின் போது¸ வாகனத்தில் 2 எதிரிகளும் இருந்தார்கள் என்று சாட்சியம் அளித்திருக்கிறார். ஆனால் புலன் விசாரணை அதிகாரி தனது சாட்சியத்தில்¸ சம்பவ இடத்தில் வைத்து¸ 1 ம் எதிரியை மட்டும் கைது செய்ததாக சாட்சியம் அளித்துள்ளார். இவர்கள் இருவரின் சாட்சியமும் ஒருவருக்கொருவர் முரணாக இருக்கிறது. சம்பவ இடத்தில் இரண்டு எதிரிகளும் இருக்கும் போது ஒருவரை மட்டும் கைது செய்ததன் காரணம் என்ன என்ற சந்தேகம் எழுகிறது. சம்பவத்தின் போது எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாகனம்¸ வருவாய்துறை அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டதற்கான ஆவணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. எதிரிகள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்கு போதிய சாட்சிய சான்றாவணங்கள் அரசு தரப்பில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. மேலும் அரசு தரப்பு சாட்சியின் சாட்சியத்தில் உள்ள சங்கதிகள் எதிரிகள் மீது உள்ள குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய குற்றக்கூறு உள்ளதாக அமையவில்லை.

13. சாட்சிகளின் சாட்சியம். புலன் விசாரணை அதிகாரி சாட்சியம்¸ ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாதது ஆகியவற்றை கருத்தில் கொண்டுப்பார்க்கும் போது¸ எதிரிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பது¸ சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்படவில்லை என்றும்¸ எனவே சந்தேகத்தின் பலனை எதிரிக்கு வழங்குவதே நியாயமாக இருக்கும் என்றும் இந்த நீதிமன்றம் கருதுகிறது.

மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிரிவு 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடன் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 கீழ் குற்றவாளிகள் அல்ல என இந்த பிரச்சினைக்கு இந்நீதிமன்றம் முடிவு காண்கிறது.

இறுதியாக அரசு தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவுகள். 6(2)(3)(4) of TNSC (RDCS) order 1982 உடன் இணைந்த பிரிவு 7(i)(a)(ii) of EC Act 1955 ன் கீழ் சுமத்திய குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறியதால் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளித்து கு.வி.மு.. பிரிவு 248(1)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தீர்ப்பளிக்கப்படுகின்றது.No comments:

Post a Comment