இரயில்வேக்கு சொந்தமான சொத்தை (சட்டப்புறம்பாக வைத்திருத்தல்) சட்டம் 1966 | Section 3 in The Railway Property (Unlawful Possession) Act, 1966

மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இராமேஸ்வரம்
முன்னிலை. திரு ஜி.என். சரவணகுமார்¸ ஏம்.ஏ.பி.எல்.
மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர்.
இராமேஸ்வரம்

ஆண்டுபட்டிகை வழக்கு எண் 124-2013

2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் நாள் திங்கள்கிழமை

குற்ற முறையிடுபவர்  
அரசுக்காக.. சார்பு ஆய்வாளர்
இரயில்வே பாதுகாப்பு படை  
இராமேஸ்வரம்
கா.நி.கு.எண்.2-13

குற்றஞ்சாட்டப்பட்டவர்  
வீரைய்யா 58-13
த-பெ. நடராஜன்
மானாமதுரை

குற்றம் வனையப்பட்டது
எதிரி மீது பிரிவு 3 (a) of RP(UP) Act ன் கீழ்

தீர்மானம்
எதிரியை மேற்படி பிரிவுன் கீழ் குற்றவாளி என்று தீர்மானம்

வழக்கின் முக்கிய குறிப்புகள்: 

"கடந்த 11.06.13ம் தேதி தான் தலைமை காவலர் சிலையப்பன்¸ காவலர் இளங்கோவன் ஆகியோர்களுடன் மண்டபம் மற்றும் பாம்பன் இரயில் நிலையங்களுக்கிடையே கண்காணித்து வந்ததாகவும் அப்போது பின்னால் ஊர்¸ பெயர்¸ விலாசம் கேட்டுத்தெரிந்த எதிரி வீரய்யா ஆகிய நீர் கையில் வெள்ளை கலர் பாலீதீன் பையில் ரயில்வேக்கு சொந்தமான செல்ப் டைப் ரிலே பாக்ஸ்¸ ஒரு நடுத்தர ஸ்குரு டிரைவர் 12¸13 அளவுள்ள ஸ்பானர் ஆகியவற்றை ஆதாயம் கருதி திருடியதாக இரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்."

"எதிரிக்கு இவ்வழக்கின் நகல்கள் அனைத்தும் கு.வி.மு.ச.பிரிவு 207(2)ன் கீழ் வழங்கப்பட்டது. மேற்படி எதிரியிடம் பிரிவு 3 (a) of RP(UP) Act ன் கீழ் குற்றச்சாட்டு வனைந்து விளக்கி வினவிய போது எதிரி தாமாக முன் வந்து தம்மிச்சையாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். எதிரியின் குற்ற ஒப்புதலில் இருந்தும் ஆவணங்களை பரிசீலனை செய்ததில் இருந்தும் எதிரியை மேற்படி பிரிவுpன் கீழ் குற்றவாளி என இந்நீதிமன்றம் தீர்மானிக்கின்றது."

"மேலும் எதிரி 27.01.2014 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிரி கொடுத்த மனுவில் தான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும்¸ ஜாமீனில் எடுப்பதற்கு வசதி இல்லை என்றும்¸ தனக்கு குழந்தைகள் உள்ளது என்றும்¸ தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார்."

"எதிரியின் குற்ற ஒப்புதல் மனு பரிசீலிக்கப்பட்டது. இவ்வழக்கு பிரிவு 3 (a) of RP(UP) Act ன் கீழ்) இந்நீதிமன்றத்தில் கோப்பிற்கு எடுக்கப்பட்டு குற்றச்சாட்டு வனைந்து விளக்கி கூறப்பட்டது. எதிரி தானாக முன்வந்து தம்மிச்சையாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். "

"மேலும் எதிரி ஆஜர்படுத்தப்பட்ட போது தான் செய்த தவறை நினைத்து வருந்தி தன்னால் பிணையில் செல்ல இயலாது எனவே தன் குடும்ப எதிர்காலத்தை கருதி தன்னை மன்னித்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். எனவே எதிரியின் வயது¸ குடும்ப சூழ்நிலையை கருத்திற்க்கொண்டும் எதிரி மீது வேறு குற்ற வழக்கு எதுவும் நிலுவையில் இல்லாத நிலையிலும்¸ சிறையில் இருந்து ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிரி தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொண்டதன் பேரிலும் எதிரிக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க இந்நீதிமன்றம் முடிவு காண்கிறது."

       "முடிவாக எதிரியை பிரிவு 3 (a) of RP(UP) Act ன் கீழ் குற்றவாளி எனத் தீர்மானித்து மேற்படி பிரிவின் கீழான குற்றத்திற்கு 1 வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து¸ குவிமுச பிரிவு 248(2) ன் கீழும்¸ எதிரி ஏற்கனவே 11.06.2013 முதல் சிறையிலிருந்த காலத்தை தண்டனைகாலத்தில் இருந்து கழித்துக் கொள்ள கு.வி.மு.ச.பிரிவு 428ன் கீழ் உத்தரவிப்படுகிறது."


No comments:

Post a Comment