ஏற்கனவே உள்ள இரண்டு ஆழ்குழாய் கிணறுகளுக்கு மத்தியில் புதிதாக ஓர் ஆழ்குழாய் கிணற்றினை பிரதிவாதியோ. ஆவரது வகையாட்களோ அமைக்கக்கூடாது

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம். துறையூர்
முன்னிலை . திரு. ஜி. பிரபாகரன். பி.ஏ.. பி.எல்..
மாவட்ட உரிமையியல் நீதிபதி. துறையூர்.
2016 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 24ம் நாள் வியாழக்கிழமை
அசல் வழக்கு எண்.199-2015.
1. ராமமூர்த்தி
2. கண்ணதாசன்
(வாதிகள் தங்களுக்காகவும். மருவத்தூர் கிராமத்தில்
குடியிருப்பவர்களின் பிரதிநிதிகள் என்ற முறையிலும்)... வாதிகள்
-எதிராக-
துறையூர் பஞ்சாயத்து யூனியன்
அதன் ஆணையாளர் மூலம் ... பிரதிவாதி

வழக்கின் முக்கிய குறிப்புகள்:

வாதிகளால் இவ்வழக்கானது. மருவத்தூர் கிராம சர்வே எண்.497-9-ல் கட்டுப்பட்ட பாதையில் ஏற்கனவே உள்ள இரண்டு ஆழ்குழாய் கிணறுகளுக்கு மத்தியில் புதிதாக ஓர் ஆழ்குழாய் கிணற்றினை பிரதிவாதியோ. ஆவரது வகையாட்களோ அமைக்கக்கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி பிரதிவாதி மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. வழக்குரைச்சுருக்கம்.
மருவத்தூர் கிராம நத்தம் சர்வே எண்.497-9-ல் பாதை செல்கிறது. மேற்படி பாதைக்கு இருபக்கத்திலும் ஏற்கனவே ஆழ்குழாய் கிணறுகள் இருக்கிறது. ஆதில் ஒன்று தனியாருக்கு சொந்தமானது. மற்றொன்று பொதுமக்களுக்காக பொதுமக்களின் உபயோகத்திற்காக அமைக்கப்பட்டது. மேற்படி இரண்டு ஆழ்குழாய் கிணறுகளுக்கும் இடையே 15 அடி தூரம் கூட இல்லை. தற்பொழுது பிரதிவாதி மேற்படி இரண்டு ஆழ்குழாய் கிணறுகளுக்கும் மத்தியில் மற்றொரு ஆழ்குழாய் கிணறு அமைக்க உத்தேசித்திருக்கிறார். அது பிரதிவாதி வழிகாட்டுதலுக்கு முரணானதாகும். பிரதிவாதி அவ்வாறு ஆழ்குழாய் கிணறு அமைத்தால் நடைமுறையில் இருக்கும் இரண்டு ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் வற்றிப்போய்விடும் என்று கூறி மேலே கூறிய பரிகாரம் கோரி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

3. இவ்வழக்கில் பிரதிவாதி ஆஜராகி எதிர்வழக்குரை தாக்கல் செய்யாததால் எக்ஸ்பார்டி செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இவ்வழக்கில் கோரியுள்ள பரிகாரம் வாதிகளால் நிரூபிக்கப்பட வேண்ழய ஒன்று என்பதால் சாட்சி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் வாதிகள் தரப்பில் ஒரு சாட்சி விசாரணை செய்யப்பட்டு. இரண்டு சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டிருக்கிறது.

வாதிகள் தரப்பில் ஆஜரான கற்றறிந்த வழக்கறிஞர் அவர்கள். நத்தம் சர்வே எண்.497-9 என்பது பாதை என்றும். அதில் ஏற்கனவே இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும். அவ்வாறுள்ள சூழ்நிலையில் புதியதாக ஓர் ஆழ்குழாய் கிணறு அவைகளுக்கு மத்தியில் அமைக்கும்பட்சத்தில் அவைகளில் தண்ணீர் இல்லாமல் போய்விடும் என்றும். அத்தோடு பாதையில் ஆழ்குழாய் கிணறுகள் எதுவும் அமைக்கவும் கூடாது என்றும் வாதிட்டு தமது வாதத்திற்கு ஆதரவாக ஏ.ஐ.ஆர்.1993 மெட்ராஸ் 258-ல் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்புவித்த உத்தரவை தாக்கல் செய்து வாதிகள் வாய்மொழி மற்றும் வா.சா.ஆ.1.2 ஆவணங்கள் மூலமாக தங்கள் வழக்கை நிரூபித்திருக்கிறார்கள் என்று வாதிட்டு வாதிகளின் வழக்கினை அனுமதிக்குமாறு வேண்டினார்.

6. வாதிகள் தங்கள் வழக்கினை நிரூபித்திருக்கிறார்களா¸ என்பது குறித்து பார்க்கும்பொழுது. 2-ம் வாதி தம்மை வா.சா.1 ஆக விசாரணை செய்துகொண்டுள்ளார். அவர் தன் வழக்குரையில் கூறியுள்ள சங்கதிகளை அனுசரித்தே தன் முதல் விசாரணை வாக்குமூலத்தை தாக்கல் செய்திருக்கிறார். வா.சா.ஆ.1 மனுவின் கை நகலினை உற்றுநோக்கும்பொழுது அது மருவத்தூர் கிராம மக்களால் ஆழ்குழாய் கிணறு அமைக்கக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்து வாதிகளால். பிரதிவாதியிடம் கொடுக்கப்பட்ட மனு என்று அறிய முடிகிறது. வா.சா.ஆ.2 வரைபடத்தின் அசலினை உற்றுநோக்கும்பொழுது அதில் இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் இருக்கிறது என்று அறிய முடிகிறது. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் ஏ.ஐ.ஆர்.1993 மெட்ராஸ் 258-ல் பிறப்புவித்திருக்கிற உத்தரவில்.“Tamil Nadu Panchayats Act (35 of 1958), Ss.80(1)(b), 76 – Public Pathway – Digging of bore well – Writ of Mandamus – Cart-track used as public pathway under provisions of Act –Digging of bore well by public authority in such pathway, not permissible.” என்று சொல்லியுள்ளது இவ்வழக்கிற்கு பொருந்தி வருகிறது. பிரதிவாதி ஓர் அரசு ஊழியர் ஆவார். உரிமையியல் வழக்குகளில் அரசு தரப்பினராக சேர்க்கப்படும்பொழுது அரசு இந்நீதிமன்றத்தில் ஆஜராகி உண்மை தன்மையை எடுத்துரைத்து நீதிமன்றம் நீதிபரிபாலனம் செய்வதற்கு உதவியாக இருக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருந்தும். பிரதிவாதி இந்நீதிமன்றத்தில் மேற்படி சாட்சியங்களை மறுத்தளிக்கும் விதத்தில் ஆஜராகி இந்நீதிமன்றத்தில் எவ்விதமான கட்சியும் செய்யாத சூழ்நிலையில். வாதிகள் தங்கள் வழக்கினை மேற்படி வாய்மொழி மற்றும் ஆவண சாட்சியங்களிலிருந்து நிரூபித்திருக்கிறார்கள் என்று இந்நீதிமன்றம் முடிவு செய்து அவ்வாறே இந்த பிரச்சனை வாதிகளுக்கு ஆதரவாக தீர்வு காணப்படுகிறது.

7. இறுதியாக. மருவத்தூர் கிராம சர்வே எண்.497-9-ல் கட்டுப்பட்ட பாதையில் ஏற்கனவே உள்ள இரண்டு ஆழ்குழாய் கிணறுகளுக்கு மத்தியில் புதிதாக ஓர் ஆழ்குழாய் கிணற்றினை பிரதிவாதியோ. அவரது வகையாட்களோ அமைக்கக்கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கி தீர்ப்பளிக்கப்படுகிறது. இவ்வழக்கின் நேர்நிலை மற்றும் தன்மை ஆகியவைகளை கருத்தில் கொண்டு செலவுத்தொகை ஏதுமில்லை.

தீர்ப்பை முழுமையாக படிக்க

No comments:

Post a Comment