இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353,294(பி)¸506(ii) | Section 353,294(b),506(ii) of Indian penal code

மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்¸ இராமேஸ்வரம்
முன்னிலை திரு. ஜி.என்.சரவணகுமார் எம்.ஏ.¸பி.எல்.¸
மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர்.
இராமேஸ்வரம்
ஆண்டுப்பட்டிகை வழக்கு எண் 7-2012
2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம்தேதி வியாழக்கிழமை

குற்றமுறையிடுபவர் 
அரசுக்காக சார்பு ஆய்வாளர்
இராமேஸ்வரம் கோவில் காவல் நிலையம்
குற்ற எண்.154-11

குற்றச்சாட்டப்பட்டவர் 
செல்வகுமார்
த-பெ.இராமதாஸ் (எ) ராமு
கிழக்குகடைத் தெரு
இராமேஸ்வரம்.

குற்றம் முறையிடப்பட்டது 
பிரிவு 353¸294(பி)¸506(ii)ஷ இதசவின் கீழ்

முடிவு 
பிரிவு 353¸294(பி)¸506(ii) இதசவின் கீழ் குற்றவாளி அல்லர் எனத் தீர்மானித்து எதிரியை கு.வி.மு.ச.பிரிவு 248(1)ன் கீழ் விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்படுகிறது.

வழக்கின் முக்கிய குறிப்புகள்:
"இவ்வழக்கின் வாதி 28.09.11ம் தேதி 18.00 மணிக்கு அ.சா.1நாராயணன். அ.சா.2 முருகேசன் இருவரும் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் (ஜெட்டி) அருகில் Q பிரிவு சம்மந்தமாக தகவல் சேகரித்து கொண்டு பணியில் இருந்தபோது எதிரி செல்வகுமார் அப்பா விசைப்படகிலிருந்து போதை பொருள் வைத்திருந்தது சம்மந்தமாக எதிரியின் அப்பா இராமதாஸ் (எ) ராமு மற்றும் விசைப்படகு ஓட்டுனர் ஆகியோர்களை கைது செய்த முன் பகையை மனதில் வைத்துக் கொண்டு கையில் கத்தியுடன் வந்து அ.சா.1.2 யும் பணி செய்யவிடாமல் தடுத்து Q பிரிவில் வேலை பார்த்தால் நீங்கள் எல்லாம் பெரிய சுன்னியாடா எங்கள் மேல் கேஸ் போடறீங்க அப்படிதாண்டா போதை பொருள் கடத்துவோம். கடத்தலை பிடிக்க வந்தால் உங்களை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் செய்து எதிரிக்கெதிராக பிரிவு 353¸ 294(பி)¸ 506(ii)இதசவின் கீழ் இராமேஸ்வரம் கோவில் காவல் நிலையம் சார்பாய்வாளர் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்."

"அரசு தரப்பில் தாக்கலான குற்ற இறுதி அறிக்கை உரிய பரிசீலனைக்கு பிறகு இந்நீதிமன்ற கோப்பிற்கு எடுக்கப்பட்ட பின்னர் எதிரிக்கு இந்நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான அழைப்பாணை வழங்கப்பட்டது. எதிரிக்கு அழைப்பாணை சார்வாகி எதிரி இந்நீதிமன்றத்தில் முன்னிலையானபோது அரசு தரப்பில் தாக்கலான வழக்காவணங்களின் நகல்கள் அனைத்தும் கு.வி.மு.ச பிரிவு 207 ன் கீழ் எதிரிகளுக்கு இலவசமாக வழங்கி குற்றம் பற்றி வினவியபோது எதிரி குற்றத்தை மறுத்தார்."

"அரசு தரப்பில் அசா.1 முதல் அ.சா.5 சாட்சிகள் விசாரிக்கப்பட்டும்¸ அ.சா.ஆ.1 முதல் அ.சாஆ.4 வரை குறியீடு செய்யப்பட்டது. அ.சா.1 நாராயணன் தனது சாட்சியத்தில் தான் தற்போது முதல் நிலை காவலர் 152 ஆக தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து வருகிறேன் என்றும் ஆயுதப்படை இராமநாதபுரத்தில் பணி செய்து வருகிறேன் என்றும்¸ கடந்த 28.09.2011ம் தேதி எதிரி செல்வகுமார் காலை 6.00 மணியளவில் எதிரியின் அப்பா¸டிரைவர் செல்வின் ராஜ் ஆகியோர்கள் எதிரியின் விசை படகில் போதை போருள் போன்ற பொருட்களை இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்ததாகவும் அவரை கைது செய்ததாகவும்¸ 'எதிரி மீது க்யூ பிராஞ்ச் காவல்நிலைய சரகத்திற்குள் நிறைய வழக்குகள் உள்ளது என்றும் 28.09.2011ம் தேதியன்று மாலை 6.00 மணியளவில் மீன்பிடி துறைமுகம் அருகில் இருப்பதாக தகவல் கிடைத்து பிடிக்கச்சென்றபோது நீங்கள் என்னடா என்மேலே கேஸ் போடுகிறீர்கள் என்றும் அப்படித்தான் கடத்துவோம் என்று அசிங்கமான வார்த்தைகளால் அப்படிதாண்டா சுன்னி மகன்களா கடத்துவோம் என்று சொல்லி திட்டியதாகவும்¸ கடத்தல் தொழில் செய்யும்போது விடுதலைபுலிகளுடன் பழக்கம் இருக்கிறது என்றும்¸ ஜெயிலில் இருக்கும்போது ரவுடிகளுடன் பழக்கம் இருக்கிறது என்றும் அதனால் கொலை செய்துவிடுவேன் என்றும்¸ எதிரியை பிடிக்க சென்றபோது கத்தியை காட்டி பக்கத்தில் வந்தால் குத்திவிடுவோம் என்றும் தானும் மகேந்திரன் மற்றும் குமரேசனும் பிடிக்க சென்ற போது அந்தோணியார் நகர் பக்கம் சென்று மறைந்து விட்டார் என்றும்¸ உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து 29.09.11ம் தேதி அன்று இரவு 9.30 மணியளவில் கோவில் காவல்நிலையத்தில் புகார் செய்தேன் என்றும் அது அ.சா.ஆ.1 என்றும் கூறி சாட்சியமளித்துள்ளார்."

அ.சா.2 முருகேசன் தனது சாட்சியத்தில் தான் க்யூ பிரான்ச் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருவதாகவும்¸ 28.09.2011ம் தேதியன்று ஜெட்டிக்கு போகிற ரோட்டில் நின்று கொண்டிருந்ததாகவும் அப்போது எதிரி செல்வகுமாரை பிடிக்க சென்ற போது க்யூ பிரிவு போலிசாரால் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்றும் தன்னை பிடிக்க முயற்சி செய்தால் தொலைத்துவிடுவேன் என்று கத்தியை காட்டி மிரட்டியதாகவும்¸ பிடிக்க சென்றபோது அந்தோணியார் கடற்கரை பக்கம் ஓடிவிட்டார் என்றும் தங்கள் அதிகாரியிடம் தெரிவித்ததாகவும் காவல்நிலையத்தில் புகார் செய்ததாகவும் கூறி சாட்சியமளித்துள்ளார்.

அ.சா.3 மகேந்திரன் தனது சாட்சியத்தில் தான் 28.09.2011ம் தேதியன்று ஜெட்டிக்கு போகிற ரோட்டில் நின்று கொண்டிருந்ததாகவும் அப்போது எதிரி செல்வகுமார் வந்து கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் கத்தியை வைத்து அ.சா.1 நாராயணனை குத்த வந்ததாகவும் அவர்கள் இருவரும் எதிரியை பிடிக்க முற்பட்டபோது தானும் சேர்ந்து ஓடியதாகவும் எதிரி ஓடிவிட்டதாகவும் க்யூ பிரான்ச் என்ன பெரிய சுன்னியா என்று கெட்ட வார்த்தைகளால் பேசியதாகவும் போலிசார் தன்னை விசாரித்ததாகவும் கூறி சாட்சியமளித்துள்ளார். 

அ.சா.4 பூமிநாதன் தனது சாட்சியத்தில் தான் 28.09.2011ம் தேதியன்று பகல் 12.00 மணியளவில் 2 போலிசார் வந்து மேப் வைத்து படம் வரைந்து கொண்டிருந்ததாகவும் தானும் ஜெயக்குமார் என்பவரும் கையெழுத்து போட்டதாகவும் அது பார்வை மகஜர் அ.சா.ஆ.2 என்றும் கூறி சாட்சியமளித்துள்ளார்.

அ.சா.5 சுப்பையா தனது சாட்சியத்தில் தான் 28.09.2011ம் தேதியன்று 21.30 மணிக்கு தான் இராமேஸ்வரம் காவல்நிலைத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்தபோது இராமேஸ்வரம் க்யூ பிரிவில் பணிபுரியும் அ.சா.1 நாராயணன் காவல்நிலையத்தில் ஆஜராகி 28.09.2011ம் தேதி 18.00 மணிக்கு இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே க்யூ பிரிவு சம்மந்தமாக பணி செய்து கொண்டிருந்தபோது எதிரி செல்வகுமார் என்பவர் அ.சா.1 நாராயணன் என்பவரை பணி செய்ய விடாமல் தடுத்து தனது அப்பா போதை பொருள் கடத்தியதை நீ தான் பிடித்துக் கொடுத்து விட்டாய் என்று முன் பகையை மனதில் வைத்துக்கொண்டு கத்தியை காட்டி அ.சா.1¸2 முன்னிலையில் கெட்ட வார்த்தையால் பேசி உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கொடுத்த புகாரைப் பெற்று நிலைய குற்ற எண்.154-2011 பிரிவு 353¸ 294(பி)¸ 506(2) இதசவாக வழக்கு பதிவு செய்ததாகவும் அந்த முதல் தகவல் அறிக்கை அ.சா.ஆ.3 என்றும் சம்பவ இடம் சென்று வரைபடம் பார்வை மகஜர் தயார் செய்ததாகவும் அந்த வரைபடம் அ.சா.ஆ.4 என்றும் சாட்சிகளை தனித்தனியாக விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் எதிரியை பல இடங்களில் தெடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அமர்வு நீதிமன்றத்தில் எதிரி முன்ஜாமீன் பெற்று தங்கள் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீனில் சென்று விட்டதாகவும்¸ 24.10.2011ம் தேதி எதிரி மீது பிரிவு 353¸294(பி)¸506(2) இதச படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் சாட்சியமளித்துள்ளார். அரசு தரப்பு சாட்சியங்கள் இத்துடன் முடித்துக்கொள்ளப்பட்டது. 

அரசு தரப்பு சாட்சியங்களிலிருந்து எதிரியை குற்றத்தோடு இணைவு படுத்தும் அம்சங்கள் குறித்து கு.வி.மு.ச பிரிவு 313(1) (ஆ) ன் கீழ் வினவியபோது எதிரிகள் பொய்சாட்சியம் என்றார். வழக்கு பற்றி ஏதாவது கூற வேண்டுமா என்று வினவியபோது பொய் வழக்கு என்றனர். எதிரிகள் தரப்பில் விசாரிக்க சாட்சிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது 

இந்நிலையில் தீர்மானிக்கப்படுவது யாதெனில் எதிரிகள் மீது அரசு தரப்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தகுநிலை ஐயத்திற்கு இடமின்றி சாட்சியங்கள் மற்றும் சான்றாவணங்கள் ரீதியாக மெய்பிக்கப்பட்டுள்ளதா என்பதேயாகும். 

இரு தரப்பு வாதம் கேட்கப்பட்டது வழக்கு ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டது. அரசு தரப்பில் 28.09.11ம் தேதி 18.00 மணிக்கு அ.சா.1நாராயணன். அ.சா.2 முருகேசன் இருவரும் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் (ஜெட்டி) அருகில் Q பிரிவு சம்மந்தமாக தகவல் சேகரித்து கொண்டு பணியில் இருந்தபோது எதிரி செல்வகுமார் அப்பா விசைப்படகிலிருந்து போதை பொருள் வைத்திருந்தது சம்மந்தமாக எதிரியின் அப்பா இராமதாஸ் (எ) ராமு மற்றும் விசைப்படகு ஓட்டுனர் ஆகியோர்களை கைது செய்த முன் பகையை மனதில் வைத்துக் கொண்டு கையில் கத்தியுடன் வந்து அ.சா.1¸2யும் பணி செய்யவிடாமல் தடுத்து க்யூ பிரிவில் வேலை பார்த்தால் நீங்கள் எல்லாம் பெரிய சுன்னியாடா எங்கள் மேல் கேஸ் போடறீங்க அப்படிதாண்டா போதை பொருள் கடத்துவோம். கடத்தலை பிடிக்க வந்தால் உங்களை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவென் என்று மிரட்டல் செய்து எதிரிக்கெதிராக பிரிவு 353¸ 294(பி)¸506(2)இதசவின் கீழ் இராமேஸ்வரம் கோவில் காவல் நிலையம் சார்பாய்வாளர் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் தாக்கல் செய்துள்ளதை காண முடிகிறது. 

எதிரியின் தரப்பில் வழக்கு சம்மந்தமாக புகார்தாரர் கொடுத்த புகார் ஒரு நாள் தாமதமாக பெறப்பட்டுள்ளது. எதிரியின் தரப்பில் வழக்கு சம்மந்தமாக வழக்கு சொத்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. உறுதியூட்டப்படாத சாட்சியத்தின் சந்தேக பலனை எதிரிக்கு வழங்கவெண்டுமென்ற எதிர்வாதத்தினை முன்வைத்தார். 

இவ்வழக்கில் சம்பவமானது 28.09.2011ம் தேதி மாலை 6.00 மணியளவில் நடந்ததாக குறிப்பிட்டு அது சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ஒரு நாள் தாமதமாக 29.09.2011ம் தேதி பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அ.சா.1 தனது சாட்சியத்தில் தாங்கள் எதிரியை பிடிக்க முற்பட்டபோது எதிரி அந்தோணியார் நகர் பக்கம் ஓடிச் சென்று மறைந்துவிட்டார் என்றும் அ.சா.2 தாங்கள் எதிரியை பிடிக்க முற்பட்டபோது அந்தோணியார் கடற்கரை பக்கம் ஓடிவிட்டார் என்றும் சாட்சியளித்துள்ளார். அ.சா.1 தனது சாட்சியத்தில் எதிரியை பிடிக்க முற்பட்டபோது அவர் ஓடி சென்று அந்தோணியார் நகர்பக்கம் சென்று மறைந்து விட்டதாகவும் தனது குறுக்கு விசாரணையில் எதிரியை 20 மீட்டர் அளவு விரட்டி சென்று அதன் பிறகு தங்களது அலுவலக பணியை தொடர்ந்து செய்ததாகவும் கூறியுள்ளார். அ.சா.2 தாங்கள் எதிரியை பிடிக்க முற்பட்டபோது அந்தோணியார் கடற்கரை பக்கம் ஓடிவிட்டதாகவும் தனது குறுக்கு விசாரணையில் எதிரியை சுமார் 20 அடி தூரத்தில் விரட்டி சென்றபோது அந்தோணியார் கோவில் தெற்கு பக்கமாக ஓடிவிட்டதாகவும் ஓடும்போது தன்னையும் தள்ளிவிட்டுதான் ஓடிச் சென்றார் என்றும் ஓடும்போது கையில் வைத்திருந்த கத்தியால் தங்களை தள்ளிவிட்டு ஓடிய போது தனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அ.சா.3 தனது எதிரி தரப்பு குறுக்கு விசாரணையில் தனக்கு வழக்கு விவரம் நேரிடையாக தெரியாது எதிரியை பிடிப்பதற்கு முன்பாகவே தப்பி ஓடினார். தாங்கள் நின்ற திசைக்கு மேற்கு பக்கமாக ஓடியதாகவும் தான் 20 அடி தூரத்தில் பார்த்ததாகவும் கூறியுள்ளார். அ.சா.5 தனது எதிரி தரப்பு குறுக்கு விசாரணையில் புகாரானது சம்பவம் நடந்த மறுநாள் 1நாள் கால தாமதமாக பெறப்பட்டது. எதிரி பயன்படுத்தியதாக சொல்லப்பட்ட கத்தி எதுவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. எதிரி அ.சா.1 மற்றும் 2 ஐ தள்ளிவிட்டதால் ஏற்பட்ட விளைவு குறித்து இறுதி அறிக்கையில் சொல்லவில்லை என்று கூறியுள்ளார். 

இவ்வழக்கில் எதிரி மீது பிரிவு 353¸ 294(பி)¸ 506(ii)இதசவின் கீழான குற்றச்சாட்டு குறித்து அ.சா.1 நாராயணன் சம்பவதன்று மாலை மீன்பிடி துறைமுகம் அருகில் எதிரி இருப்பதாக தகவல் கிடைத்து அவரை பிடிக்க சென்றபோது தங்களை தள்ளிவிட்டு எதிரி அந்தோணியார் நகர் பக்கம் ஓடி சென்று மறைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். அ.சா.2 முருகேசன் தாங்கள் எதிரியை பிடிக்க சென்ற போது அந்தோணியார் கடற்கரை பக்கம் ஓடிவிட்டதாக கூறியுள்ள நிலையில் அ.சா.1 நாராயணன் தனது குறுக்கு விசாரணையில் எதிரியை சுமார் 20 மீட்டர் அளவு விரட்டி சென்று அதன்பிறகு தங்கள் அலுவலக பணியை தொடர்ந்து செய்ததாக கூறியுள்ளார். எதிரியின் மீது நிலுவையில் உள்ள வழக்கு சம்மந்தமாக பிடிக்க சென்றபோது எதிரி தங்களை தள்ளிவிட்டு ஓடி சென்றதாக அரசு தரப்பில் சொல்லப்பட்ட நிலையில் எந்த வழக்கு சம்பந்தமாக எதன் அடிப்படையில் பிடிக்க சென்றது குறித்து சாட்சிய சான்றாவணங்கள் அவர் தரப்பில் முன்வைக்கவில்லை. எதிரி மீது சுமத்தப்பட்ட பிரிவு 353ன் படியான குற்றச்சாட்டை பொறுத்தும் அரசு தரப்பில் தக்க சாட்சியங்கள் மற்றும் சான்றவாணங்கள் முலம் நிருபிக்கப்படவில்லை என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. 

இவ்வழக்கில் எதிரி மீது பிரிவு 294(பி) இதசவின் கீழ்hன குற்றச்சாட்டு குறித்து அ.சா.1 நாராயணன் தனது சாட்சியத்தில் சம்பவதன்று மீன்பிடி துறைமுகம் அருகில் எதிரியை பிடிக்க சென்றபோது நீங்கள் என்னடா என்மேலெயே கேஸ் போடுகீறீர்கள் அப்படித்தாண்டா சுன்னி மகன்களா கடத்துவோம் என்று அசிங்கமான வார்த்தைகளால் பேசியதாகவும். அ.சா.3 மகேந்திரன் சம்பவதன்று எதிரி க்யூ பிராஞ்ச் என்ன பெரிய சுன்னியா என்று இன்னும் கெட்ட வார்த்தைகளால் பேசியதாக கூறியுள்ளார். அ.சா.2 மகேந்திரன் எதிரி அசிங்கமாக பேசியது குறித்து தனது சாட்சியத்தில் எதுவும் கூறாத நிலையில் சம்பவ இடத்தில் இருந்த கண்ணுற்ற சாட்சியங்களின் முன்னுக்கு முன் முரண்பாடான சாட்சியத்தின் அடிப்படையில் எதிரி மீது பிரிவு 294(பி) இதசவின் படியான குற்றச்சாட்டை பொறுத்தும் அரசு தரப்பில் தக்க சாட்சியங்கள் மற்றும் சான்றவாணங்கள் முலம் நிருபிக்கப்படவில்லை என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

அ.சா.2 முருகேசன் தனது சாட்சியத்தில் எதிரி கையில் வைத்திருந்த கத்தியால் எங்களை தள்ளி விட்டு ஓடிய போது தங்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறியுள்ள நிலையிலும் எதிரி தன் கைவசம் வைத்திருந்ததாக சொல்லப்பட்ட கத்தியை அரசு தரப்பில் ஆஜர்படுத்தப்படவில்லை எதிரியுடைய குற்ற செயல் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையினர் சேர்ந்தவர் என்ற நிலையில் சம்பவமானது அவரது உயிர் மற்றும் உடைமைக்கு பங்கமோ பாதிப்போ ஏற்படக்கூடிய வகையில் இல்லை என்றே இந்நீதிமன்றம் கருதுகிறது. எதிரி மீது சுமத்தப்பட்ட பிரிவு 506(ii) ன் படியான குற்றச்சாட்டை பொறுத்தும் அரசு தரப்பில் தக்க சாட்சியங்கள் மற்றும் சான்றவாணங்கள் முலம் நிருபிக்கப்படவில்லை என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

ஆகவே இறுதியாக அரசு தரப்பில் எதிரி மீது பிரிவு 506(ii) இதசவின் கீழ் குற்றச்சாட்டு தகுநிலை ஐயத்திற்கிடமின்றி சாட்சியங்கள் மற்றும் சான்றாவணங்கள் ரீதியாக மெய்ப்பிக்கத் தவறியிருப்பதால் எதிரியின் மீது பிரிவு 506(ii) இதச வின் கீழான குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை என்றே இந்நீதிமன்றம் முடிவு காண்கிறது.

இறுதியாக எதிரி மீது பிரிவு 353¸ 294(பி)¸ 506(ii)இதசவின் கீழ் குற்றவாளி அல்ல என தீர்மானித்து எதிரியை கு.வி.மு.ச பிரிவு 248(1)ன் கீழ் விடுதலை செய்தும். அவர்தம் பிணைமுறிகளை ரத்து செய்தும் தீர்ப்பளிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment