வாதிகள் தங்கள் வழக்கினை தங்களுடைய வாய்மொழி மற்றும் ஆவண சாட்சியங்கள் மூலமாகத்தான் நிருபிக்க வேண்டும்

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம். துறையூர்
முன்னிலை. திரு.ஜி.பிரபாகரன், பி.ஏ., பி.எல்.,
மாவட்ட உரிமையியல் நீதிபதி. துறையூர்
2016-ம் ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 18-ம் நாள் வேள்ளிக்கிழமை
அசல் வழக்கு எண்: 22/1996
1. விஸ்வநாதன் (இறப்பு)
2. சாரதா
3. சுசீலா
4. சுதா
5. மனோகரன்
6. கருணாகரன்
(6-ம் வாதி தனது பவர் ஏஜண்ட் மனோகரன் மூலம்)... வாதிகள்
                                                               -எதிராக-
பூவாயி அம்மாள்                    ... பிரதிவாதி

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

“இவ்வழக்கில் ஏற்கனவே இந்நீதிமன்றம் கடந்த 19.03.2001-ம் தேதியன்று பிறப்புவித்த தீர்ப்புரை மற்றும் தீர்ப்பாணையின்பேரில் குறையுற்ற வாதி மாண்புமிகு திருச்சிராப்பள்ளி இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கு எண்.63-2001-ல் இந்நீதிமன்றம் பிறப்புவித்த தீர்ப்பாணை கடந்த 31.01.2002-ம் தேதியன்று நீக்கறவு செய்யப்பட்டு, தரப்பினர்களுக்கு வாய்மொழி மற்றும் ஆவண சாட்சியங்கள் அளிக்க உரிய வாய்ப்புக்கள் அளிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவுடன் இவ்வழக்கானது இந்நீதிமன்றத்திற்கு மீட்டனுப்புகை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இவ்வழக்கானது மீண்டும் இந்நீதிமன்றத்தால் கோப்பிற்கு எடுக்கப்பட்டு, தரப்பினர்கள் சாட்சியம் அளிக்க ஏதுவாக போதிய வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.”

"வாதிகள் தங்கள் வழக்கினை தங்களுடைய வாய்மொழி மற்றும் ஆவண சாட்சியங்கள் மூலமாகத்தான் நிருபிக்க வேண்டும் என்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 2013 (4) சி.டி.சி. 545-ல். 
“Burden of proof lies on plaintiff irrespective of their being any written statement or evidence of rebuttal the plaintiff to succeed in suit only on the basis of strength in his case and not on the basis of weakness in the defendants' case.”
என்று சொல்லியுள்ளதும் இவ்வழக்கிற்கு பொருந்தி வருகிறது. மேற்படி சாட்சியங்கள், சட்ட நிலைப்பாடுகளிலிருந்து வாதிகள் சொல்வதுபோல் வழக்குரை 2-ம் இலக்கச்சொத்து வாதிகளுக்கு பாத்தியப்பட்டது என்பதையும். அதை பிரதிவாதி ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார் என்பதையும் வாதிகள் நிரூபிக்கவில்லை என்று இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது. அதனால், வாதிகள் விளம்புகை பரிகாரமும். சுவாதீன பரிகாரமும். மத்தியக்கால வரும்படியும் பெற அருகர்கள் அல்ல என்று இந்நீதிமன்றம் முடிவு செய்து அவ்வாறே இந்த எழுவினாக்கள் வாதிகளுக்கு எதிராக தீர்வு காணப்படுகிறது.”


1994 ஏ.ஐ.ஆர். 152 எஸ்.சி. என்னும் தீர்ப்புரையில் மாண்புமிகு உச்சநீதிமன்றம்.
“We find no force in the contention. It is settled law that in a suit for injunction when title is in issue for the purpose of granting injunction, the issue directly and substantially arises in that suit between the parties. When the same issue is put in issue in a later suit based on title between the same parties or their privies in a subsequent suit the decree in the injunction suit equally operates as res-judicata.”
என்று சொல்லியுள்ளது இவ்வழக்கிற்கு பொருந்தி வருகிறது. இவ்வாறாக இவ்வழக்கு பிரச்சனை ஏற்கனவே முந்தைய வழக்கில் இறுதியாக தீர்வு காணப்படடிருக்கின்ற சூழ்நிலையில், வாதிகளின் இவ்வழக்கானது முன்தீhப்புத்தடை என்னும் தோசத்திற்கு ஆட்படுகிறது என்று இந்நீதிமன்றம் முடிவு செய்து அவ்வாறே இந்த எழுவினா வாதிகளுக்கு எதிராக தீர்வு காணப்படுகிறது.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 2014 (3) சி.டி.சி.802-ல். 
சீதாராமன் -எதிர்- ஜெயராமன் என்னும் வழக்கில். 
“When the suit is filed for Declaration and for recovery of possession on the basis title, the time limit for instituting the suits is 12 years under Article 65 and not 3 years under Article 58.”
என்று சொல்லப்பட்டிருப்பது இவ்வழக்கிற்கு பொருந்தி வருவதால் வாதிகளின் இவ்வழக்கு காலாவதி தோசத்திற்கு ஆட்படவில்லை என்று இந்த நீதிமன்றம் முடிவு செய்து அவ்வாறே இந்த எழுவினா வாதிகளுக்கு ஆதரவாக தீhவு காணப்படுகிறது.


No comments:

Post a Comment