சி.பி.சி. பிரிவு 80-ன்படி அறிவிப்பு அனுப்ப வேண்டியது அத்தியாவசிமான ஒன்றா | Section 14A of Tamil Nadu Estates (Abolition and Conversion in to Ryotwari) Act 1948

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம். துறையூர்
முன்னிலை . திரு. ஜி. பிரபாகரன்,. பி.ஏ., பி.எல்.,
மாவட்ட உரிமையியல் நீதிபதி, துறையூர்.
2015-ம் ஆம் ஆண்டு நவம்பர் திங்;கள் 21-ம் நாள் சனிக்கிழமை
அசல் வழக்கு எண்:165/2008
குடும்ப மேலாளர் நாகரத்தினம் ................................. வாதி
                                                               -எதிராக-
1. வரதராஜபுரம் பஞ்சாயத்து
அதன் தலைவர் முலம்.
2. ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், (கிராம பஞ்சாயத்து)
துறையூர்.                  ................................. பிரதிவாதிகள்

வாதி கோரியுள்ள பரிகாரம்:
"வாதியால் இவ்வழக்கானது, வழக்குரை சொத்தில் உள்ள வாதியின் அமைதியான சுவாதீன அனுபவத்திற்கு பிரதிவாதிகளோ, அவர்களது வகையாட்களோ எவ்விதமான இடையூறும் செய்யக்கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரியும் மற்றும் செலவுத்தொகை கோரியும் பிரதிவாதிகள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளது."

2. வழக்குரைச்சுருக்கம்.
ஆதியில், வழக்குரைச்சொத்து வேங்கடத்தானூர் கிராமத்தை சேர்ந்த சப்பானிப்பிள்ளை என்பவருக்கு பாத்தியப்பட்டு, அவரது பெயரிலேயே பட்டா ஏற்பட்டிருந்தது. அப்பால் வழக்குரைச்சொத்தை மேற்படி சப்பானிப்பிள்ளை கடந்த 02.08.1971-ம் தேதிய பதிவு கிரையப்பத்திரத்தின் அடிப்படையில் வாதியின் தகப்பனாருக்கு கிரையம் செய்து கொடுத்துவிட்டார். அதனடிப்படையில், வர்க்குரைச்சொத்து வாதியின் தகப்பனாருக்கு பாத்தியப்பட்டு அவரது சுவாதீன அனுபவத்தில் இருந்து வந்தது. ஆதியில், வழக்குரைச்சொத்து உள்ள கிராமம் ஜமீன் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அப்பால் ரயத்வாரி செட்டில்மெண்ட்டில் வழக்குரைச்சொத்து சர்வே செய்யப்பட்டு புன்சை என்று வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில். தமிழக அரசு Tamil Nadu Estates (Abolition and Conversion in to Ryotwari) Act 1948-ல் ஓர் திருத்தத்தை கொண்டு வந்து அதில் '14ஏ'என்ற ஓர் உட்பிரிவை ஏற்படுத்தியது. மேற்படி உட்பிரிவின்படி தனியார் குட்டைகளுக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டு, அவைகள் அரசுக்கு பாத்தியப்பட்டது என்று ஆக்கப்பட்டது. அதனடிப்படையில். புதுக்கோட்டை அசிஸ்டண்ட் செட்டில்மெண்ட் ஆபிசர் அவர்கள் கடந்த 16.10.1978-ம் தேதியில் ஆர்.சி.7508-ஏ2-78 என்ற தனது அலுவலக நடவடிக்கையின்படி வழக்குரைச்சொத்தை பொருத்து வாங்ப்பட்டிருந்த பட்டாவை ரத்து செய்த விவரத்தை வாதியின் தகப்பனாருக்கு தெரிவித்துள்ளார். மேற்படி உத்தரவை எதிர்த்து வாதியின் தகப்பனார் தஞ்சாவூர் செட்டில்மெண்ட் அலுவலரிடம் ஓர் சீராய்வு மனு தாக்கல் செய்தார். மேற்படி சீராய்வு மனுவும் தஞ்சாவூர் செட்டில்மெண்ட் அலுவலரால் கடந்த 15.02.1979-ம் தேதியில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதனடிப்படையில், வழக்குரைச்சொத்தை பொருத்து வருவாய் ஆவணங்களில் சப்பானிப்பிள்ளையின் பெயர் நீக்கப்பட்டு, வழக்குரைச்சொத்து புறம்போக்கு குட்டை என்றும், கோவிந்தன்குட்டை என்றும் வகைப்பாடு செய்யப்பட்டது. அப்பால், வாதியின் தகப்பனார் தஞ்சாவூர் செட்டில்மெண்ட் ஆபிசர் அவர்கள் பிறப்புவித்த உத்தரவை எதிர்த்து Director of Survey and Settlement, Madras -ல் ஓர் சீராய்வு மனு தாக்கல் செய்தார். மேற்படி சீராய்வு மனுவும் ஆர்.பி. எண்.103-79 என நெம்பராகி தஞ்சாவூர் செட்டில்மெண்ட் ஆபிசர் பிறப்புவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, தஞ்சாவூர் செட்டில்மெண்ட் ஆபிசர் அவர்கள் வழக்குரைச்சொத்தை நேரடியாக ஸ்தல ஆய்வு செய்து அப்பால் வாதியின் தகப்பனாருக்கு உரிய வாய்ப்புகள் அளித்து மறுபடியும் சட்டப்படி உரிய உத்தரவு பிறப்புவிக்க வேண்டும் என்று ரிமாண்ட் செய்து உத்தரவு பிறப்புவித்தார். அதனடிப்படையில், தஞ்சாவூர் உதவி செட்டில்மெண்ட் அலுவலர் அவர்களும் கடந்த 01.04.1981-ம் தேதியில் வழக்குரைச்சொத்தை பார்வையிட்டு அது ஆழமில்லாத குட்டையாக இருப்பதாகவும், அது மனுதாரரின் பயன்பாட்டிலும் இல்லை என்றும், அது பொதுமக்களால் பாசனத்திற்காக பயன்படுத்தப்படவும் இல்லை என்றும் தன் குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார். அதன் பின்னர் வாதியின் தகப்பனார் தஞ்சாவூர் உதவி செட்டில்மெண்ட அலுவலர் அவர்களை பலமுறை அணுகியும் அவர் Director of Survey and Settlement, Madras அவர்கள் உத்தரவிட்டபடி இறுதி உத்தரவு பிறப்புவிக்க எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனடிப்படையில், வர்க்குரைச்சொத்தை வாதியின் தகப்பனாரே தன் ஆயுள்காலம் வரை அனுபவித்து வந்து கடந்த 1986-ம் ஆண்டு வாக்கில் வாதியின் தாயாரையும், வாதியையும் மற்றும் வாதியின் நான்கு சகோதரர்களையும் வாரிசுகளாக விட்டுவிட்டு இறந்துபோய்விட்டார். அதன் பின்னர் கடந்த 2008-ம் ஆண்டு வாக்கில் வாதியின் தாயாரும் இறந்துபோய்விட்டார். வாதி குடும்பத்தில் மூத்த உறுப்பினர் ஆவார். அதனடிப்படையில், வழக்குரைச்சொத்தை வாதியே குடும்ப மேலாளர் என்ற அடிப்படையில் நிர்வகித்து வருகிறார். இவ்வாறாக, வழக்குரைச்சொத்து வாதிக்கு பாத்தியப்பட்டிருக்கும்பொழுது தஞ்சாவூர் உதவி செட்டில்மெண்ட அலுவலர் அவர்கள்தவறாக பிறப்புவித்த உத்தரவின் அடிப்படையில் வருவாய் ஆவணங்களில் தவறாக உட்பிரிவு செய்யப்பட்டு வைத்திருப்பதை பிரதிவாதிகள் சாதகமாக கொண்டு கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் வகையில் வழக்குரைச்சொத்தை ஆழப்படுத்தி அதை ஊற்றுநீர் குட்டையாக மாற்ற கடந்த 20.07.2008-ம் தேதியில் முயற்சி செய்ததால் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி இவ்வழக்கு பிரதிவாதிகள் மீது தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

3. 1-ம் பிரதிவாதியால் தாக்கல் செய்யப்பட்டு, 2-ம் பிரதிவாதியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்வழக்குரைச்சுருக்கம்:
வாதி தன் வழக்குரை பாரா 3,4,5,6,7-ல் சொல்லியுள்ள சங்;கதிகள் உண்மையல்ல. வழக்குரைச்சொத்தை பொருத்து வாதியோ, வாதியின் முன்பாத்தியஸ்தர்களோ பத்திரங்;கள் ஏற்படுத்தியிருந்தால் அது செல்லத்தக்கதல்ல. வழக்குரைச்சொத்து வாதிக்கோ, வாதியின் குடும்பத்தார்களுக்கோ, வாதியின் முன்னோர்களுக்கோ பாத்தியப்பட்டது அல்ல. வழக்குரைச்சொத்து அரசுக்கு பாத்தியப்பட்ட கோவிந்தன் குட்டை புறம்போக்கு நிலமாகும். வழக்குரைச்சொத்தும் வருவாய்துறை ஆவணங்களில் அவ்வாறே வகைப்பாடும் செய்யப்பட்டு அது அரசின் நிர்வாகத்தில் இருந்து வருகிறது. வழக்குரைச்சொத்தில் வாதி தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாடுவது சட்டப்படி ஏற்புடையதல்ல. வாதியின் இவ்வழக்கானது வருவாய்துறையினரை தரப்பினராக சேர்க்காத தோசத்திற்கு ஆட்படுகிறது. வழக்குரைச்சொத்து அரசுக்கு பாத்தியப்பட்ட குட்டை என்பதால் பிரதிவாதிகள் வருவாய்துறை கணக்குகளை வாங்கி சரிபார்த்து தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் 2005-ன்படி தேசிய ஊரக உறுதித்திட்டம் தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1-ம் பிரதிவாதியின் எல்லைக்குட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் நிர்வாக அனுமதி எண்.நா.க.கி.5-83-2008 நாள் 28.07.2008-ன்படி வழக்குரைச்சொத்து தூர் வாரப்பட்டுள்ளது. வழக்குரை குட்டையை ஆழப்படுத்தாமலோ, தூர் வாராமலோ விட்டுவிட்டால் அரசுக்கு பெருத்த கஸ்ட, நஸ்டம் ஏற்பட்டுவிடும். அத்தோடு கிராம கூலி தொழிலாளர்களுக்கும் வேலை கொடுக்க இயலாமல் சிரமம் ஏற்படும். வாதி 2-ம் பிரதிவாதிக்கு எதிராக சி.பி.சி. பிரிவு 80-ன் பிரகாரம் அறிவிப்பும் கொடுக்கவில்லை. வாதிக்கு இவ்வழக்கை தாக்கல் செய்ய வழக்குமூலமே இல்லை. சொல்லியிருக்கும் வழக்குமூலமும் பொய்யாகும். அதனால், வாதியின் வழக்கானது பிரதிவாதிகளின் செலவு தொகையுடன் தள்ளுபடி செய்யப்படவேண்டும்.

"வழக்குரைச்சொத்து வாதிக்கு பாத்தியப்பட்டிருக்கும்போது பிரதிவாதிகள் வழக்குரைச்சொத்தை ஆழப்படுத்தி அதை ஊற்றுநீர் குட்டையாக மாற்ற கடந்த 20.07.2008-ம் தேதியில் முயற்சி செய்ததால் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் கோரி வாதியால் இவ்வழக்கு பிரதிவாதிகள் மீது தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றும், வாதி தன் வழக்கினை வாய்மொழி மற்றும் ஆவண சாட்சியம் மூலமாக நிரூபித்திருக்கிறார் என்றும், Section 231 of Panchayat Act-ன் பிரகாரம் பிரதிவாதிகளுக்கு அறிவிப்பு கொடுக்க வேண்ழய அவசியமில்லை என்றும் வாதிட்டு தமது வாதத்திற்கு ஆதரவாக 1982டி.எல்.என்.ஜே. 209, 1999 (3) சி.டி.சி. 636-ல் பிறப்புவிக்கப்பட்ட முன்னோடி தீர்ப்புரையை சமர்ப்பித்து வாதியின் வழக்கினை அனுமதிக்குமாறு வேண்டினார்."

7. மாறாக, பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான கற்றறிந்த வழக்கறிஞர் அவர்கள், வழக்குரைச்சொத்தை பொருத்து வாதியோ, வாதியின் முன்பாத்தியஸ்தர்களோ பத்திரங்;கள் ஏற்படுத்தியிருந்தால் அது செல்லத்தக்கதல்ல என்றும், வழக்குரைச்சொத்து வாதிக்கோ, வாதியின் குடும்பத்தார்களுக்கோ, வாதியின் முன்னோர்களுக்கோ பாத்தியப்பட்டது அல்ல என்றும், வழக்குரைச்சொத்து அரசுக்கு பாத்தியப்பட்ட கோவிந்தன் குட்டை புறம்போக்கு நிலமாகும் என்றும், வழக்குரைச்சொத்தும் வருவாய்துறை ஆவணங்;களில் அவ்வாறே வகைப்பாடும் செய்யப்பட்டு அது அரசின் நிர்வாகத்தில் இருந்து வருகிறது என்றும், வழக்குரைச்சொத்தில் வாதி தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாடுவது சட்டப்படி ஏற்புடையதல்ல என்றும், வாதியின் இவ்வழக்கானது வருவாய்துறையினரை தரப்பினராக சேர்க்காத தோசத்திற்கு ஆட்படுகிறது என்றும் வழக்குரைச்சொத்து அரசுக்கு பாத்தியப்பட்ட குட்டை என்பதால் பிரதிவாதிகள் வருவாய்துறை கணக்குகளை வாங்;கி சரிபார்த்து தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் 2005-ன்படி தேசிய ஊரக உறுதித்திட்டம் தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1-ம் பிரதிவாதியின் எல்லைக்குட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் நிர்வாக அனுமதி எண்.நா.க.கி.5-83-2008 நாள் 28.07.2008-ன்படி வழக்குரைச்சொத்து தூர் வாரப்பட்டுள்ளது என்றும், வழக்குரை குட்டையை ஆழப்படுத்தாமலோ, தூர் வாராமலோ விட்டுவிட்டால் அரசுக்கு பெருத்த கஸ்ட, நஸ்டம் ஏற்பட்டுவிடும் என்றும், அத்தோடு கிராம கூலி தொழிலாளர்களுக்கும் வேலை கொடுக்க இயலாமல் சிரமம் ஏற்படும் என்றும், வாதி 2-ம் பிரதிவாதிக்கு எதிராக சி.பி.சி. பிரிவு 80-ன் பிரகாரம் அறிவிப்பும் கொடுக்கவில்லை என்றும். அதனால், வாதியின் வழக்கானது பிரதிவாதிகளின் செலவு தொகையுடன் தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்றும், வாதி தன் வழக்கினை நிரூபிக்கவில்லை என்றும் வாதிட்டு வாதியின் வழக்கை பிரதிவாதிகளின் செலவு தொகையுடன் தள்ளுபடி செய்யுமாறு வேண்டினார்.

8. முதலில், இம்மாதிரியான வழக்குகளை விசாரணை செய்வதற்கு இந்நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இருக்கிறதா என்பது குறித்து பார்க்கும்பொழுது ஏ.ஐ.ஆர்.1986 எஸ்.ஸி. 794-ல் மாண்புமிகு உச்சநீதிமன்றம் Tamil Nadu Estates (Abolition and Conversion into Ryotwari) Act (26 of 1948), Ss.64-C,3(d), 11 and 15 – T.N.Estate Lands Act (1 of 1908), S.3(15) and (16) – Exclusion of Civil Court's jurisdiction -Application by Ryot for Ryotwari Patta under S.11 – Grant or refusal by Settlement Officer – Adjudication on real nature of land by Civil Court – Jurisdiction of Civil Court is not barred. (Civil P.C. (1908), S.9).' என்றும், 
மாண்புமிகு உச்சநீதிமன்றம் 1998 (2) லா வீக்லி 188-ல் Tamil Nadu Minor Inams (Abolition and Conversion into Ryotwari) Act (1963), and C.P.C., S.9 – Suit in civil Court to adjudicate title of the parties not barred by the  Provisions of the Act -என்றும் சொல்லப்பட்டுள்ளது. அத்தோடு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 1998 (3) லா வீக்லி 559-ல். பாரா 16-ல் Civil Court Jurisdiction to adjudicate the title of the parties is not barred by the virtue of the provisions of the said Act.என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வழக்கும் அசிஸ்டண்ட் செட்டில்மெண்ட ஆபிசர் பிறப்புவித்த உத்தரவிற்கு எதிராக அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டது அல்ல என்னும் சூழ்நிலையில், வழக்குரைச்சொத்தில் உள்ள உரிமையை தீர்மானிப்பதற்கும், உறுத்துக்கட்டளை பரிகாரத்தை பொருத்து தீர்மானிப்பதற்கும் இந்நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு உள்ளது என்று இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது. இம்மாதிரியான வழக்குகளை தாக்கல் செய்வதற்கு முன்பாக சி.பி.சி. பிரிவு 80-ன்படி அறிவிப்பு அனுப்ப வேண்டியது அத்தியாவசிமான ஒன்றா என்பது குறித்து சி.பி.சி. பிரிவு 80-ஐ பார்க்கும்பொழுது அதில். (1) Save as otherwise provided in sub-section (2) no suit shall be instituted) against the Government (including the Government of the State of Jammu and Kashmir) or against a public officer in respect of any act purporting to be done by such public officer in his official capacity, until the expiration of two months next after notice in writing has been delivered to, என்று தான் சொல்லப்பட்டுள்ளது என்னும் நிலையில், இவ்வழக்கிற்கு அறிவிப்பே தேவையில்லை என்று இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது.

"வா.சா.ஆ.2 கடந்த 23.08.1979-ம் தேதிய Director of Survey and Settlements அவர்கள் பிறப்புவித்த உத்தரவின் அசலினை உற்றுநோக்கும்பொழுது அதில், “I therefore set aside the orders of the settlement Officer and Assistant Settlement Officer and remand the case to the Assistant Settlement Officer, Tanjore for a fresh enquiry and examination of the Village accounts and disposal according to law. before taking up the case the Assistant Settlement officer should personally inspect the land after due notices to the parties give an opportunity to the revision petition to put forth his plea of the inspection notes and pass an orders” என்று சொல்லப்பட்டுள்ளது. மேற்படி சாட்சியத்திலிருந்து Tamil Nadu Estates (Abolition and Conversion into Ryotwari) Act, பிரிவு 14ஏ-ன் கீழ் வாதியின் தகப்பனாரின் கிரையதாரரான சப்பானிப்பிள்ளையின் பெயரிலிருந்த பட்டாவை ரத்து செய்து பிறப்புவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று அறிய முடிகிறது. இவ்வாறு வழக்குரைச்சொத்தை பொருத்து உத்தரவு பிறப்புவிக்கப்பட்டவுடன் வழக்குரைச்சொத்தை பொருத்து வாதியின் தகப்பனாருக்கு உரிமை வந்துவிடுகிறது என்று இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது. வா.சா.ஆ.4 கடந்த 01.04.1981-ம் தேதிய தஞ்சாவூர் அசிஸ்டண்ட் செட்டில்மெண்ட் ஆபிசர் அவர்களின் வாக்குமூலத்தை உற்றுநோக்கும்பொழுது அதில் The depth of pond is about ½ feet to 2 feet depth (north ½ feet, south 2 feet). It is now dry. It was a pond on the notified date and it continuous to be a pond even now. But the petitioner says that the pond is not useful to him as it is not useful for irrigation. There are six morgues and five Nona trees. The pond is not is public use and it is not used for irrigational purposes also. என்று சொல்லப்பட்டுள்ளது. தஞ்சாவூர் உதவி செட்டில்மெண்ட அலுவலர் அவ்வாறு பார்வையிட்டு சென்ற பின்னர் எவ்விதமான உத்தரவும் பிறப்புவிக்காத சூழ்நிலையில் வழக்குரைச்சொத்தில் வாதியின் தகப்பனாருக்கு உள்ள உரிமை மாறவில்லை என்றே இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது."

"மாண்புமிகு உச்சநீதிமன்றம் ஏ.ஐ.ஆர்.1997 சுப்ரீம் கோர்ட் 2719-ல்.Entries in Revenue Records do not convey or extinguish any title.” என்று சொல்லப்பட்டுள்ளது. மேற்படி தீர்ப்புரையிலிருந்தும், தஞ்சாவூர் அசிஸ்;டண்ட் செட்டில்மெண்ட ஆபிசர் அவர்கள் சப்பானி பிள்ளையின் பெயரிலிருந்த பட்டாவை ரத்து செய்து பிறப்புவித்த உத்தரவின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்ட வருவாய் ஆவணங்களான பி.வா.சா.ஆ.1,2-ன் மூலம் வழக்குரைச்சொத்தை பொருத்து அரசுக்கு எவ்விதமான உரிமையும் ஏற்பட்டுவிடவில்லை என்று இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது."

11. இறுதியாக, வழக்குரைச்சொத்தில் உள்ள வாதியின் அமைதியான சுவாதீன அனுபவத்திற்கு பிரதிவாதிகளோ, அவர்களது வகையாட்களோ எவ்விதமான இடையூறும் செய்யக்கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கி தீர்ப்பளிக்கப்படுகிறது. இவ்வழக்கின் சூழ்நிலை மற்றும் தன்மையை கருத்திற்கொண்டு செலவுத்தொகையில்லை.

No comments:

Post a Comment