மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 20 | Section 20 of Negotiable Instruments Act

குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,(விரைவு நீதிமன்றம்),வேலூர்.
முன்னிலை: திரு.கோ.பிரபாகரன், பி.ஏ., எம்.எல்.,
நீதித்துறை நடுவர் (பொறுப்பு), விரைவு நீதிமன்றம், வேலூர்
2014- ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 14- ஆம் நாள் திங்கட்கிழமை,
ஆண்டுப்பட்டிகை வழக்கு எண். 181 / 2013
பி.தங்கம், வயது 45.
க/பெ.வி.ஜெயச்சந்திரன்        ...….......……....வாதி
                                                          எதிராக
இ. அன்புஜோதி. வயது.38.
க/பெ.வி.எஸ்.லட்சுமி நரசிம்மன்     .. ……….....எதிரி


வழக்கின் முக்கிய குறிப்புகள்:
சட்டப்பிரிவுகள்:
மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 20, மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 118, மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 138, மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 139, கு.வி.மு.ச. பிரிவு 357

1. இவ்வழக்கானது மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 138-ன் கீழான குற்றத்திற்காக வாதியால் எதிரியின் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள தனியார் குற்றமுறையீட்டின் அடிப்படையில் எழுந்ததாகும்.

வாதி குற்றமுறையீட்டின் சுருக்கம்: 
“பின்வருமாறு எதிரி அன்புஜோதி கிரேட் வென்சர்ஸ் நிறுவனத்தில் முகவராக பணியாற்றி வருகிறார். மேற்படி நிறுவனம் ஒரு பங்கு வியாபார நிறுவனம் ஆகும். வாதியின் சகோதரி தேவி என்பவர் மூலமாக எதிரி வாதிக்கு அறிமுகமானார். அதனால் அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்தது. எதிரி தன்னுடைய வியாபாரத்தில் பணம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்று கூறி கடந்த 12.07.2013 தேதியில் வாதியிடம் ரு.3,00,000/-ஐ கடன் பெற்றுக் கொண்டு, மேற்படி தொகையை அவருடைய பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து தொகையை இரட்டிப்பாகும் என்று கூறி வாங்கினார். வர்த்தகத்தில் உள்ள அபாயத்தை வாதிக்கு மற்றவர்கள் கூறியதால் எதிரியிடம் சென்று வாதி பணத்தை திரும்ப கேட்டதற்கு, எதிரி 15.07.2013 தேதியில் கடனை திருப்பி செலுத்தும் பொருட்டு வாதிக்கு 15.07.2013 தேதியிட்ட ரு.3,00,000/-க்கான ஐ.டி.பி.ஐ வங்கி, பெண்கள் கணக்கு, காந்தி நகர், வேலூர் கிளையின் எண்.050806 கொண்ட காசோலையை கொடுத்தார். வாதிக்கு காசோலையை கொடுக்கும்போது தேவையான பணத்தை வங்கி கணக்கில் வரவு வைத்திருப்பதாகவும், காசோலையை வசூலுக்கு தாக்கல் செய்தால் பணமாக்கப்படும் என்றும் எதிரி உறுதி அளித்தார். எதிரி கூறிய வார்த்தையை நம்பி மேற்படி காசோலையை பணமாக்கும் பொருட்டு கடந்த 16.07.2013 தேதியில் வாதி கணக்கு வைத்துள்ள இந்தியன் வங்கி, வேலூர் கிளையில் வசூலுக்காக தாக்கல் செய்தார். காசோலை எதிரியின் வங்கி கணக்கு பட்டுவாடா நிறுத்தி வைக்கப்பட்டது, என்று காரணம் குறிப்பிட்டு 17.07.2013 தேதியிட்ட வங்கி குறிப்பாணை மூலம் வாதிக்கு திருப்பப்பட்டது. காசோலை திரும்பிய விவரத்தை குறிப்பிட்டும், காசோலைக்கான தொகையை கேட்டும் எதிரிக்கு 01.08.2013 தேதியில் வாதி வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பினார். ஏதிரி அறிவிப்பை 03.08.2013 தேதியில் பெற்றுக்கொண்டு, பொய்யான தகவலுடன் 13.08.2013 தேதியிட்ட பதில் வழக்கறிஞர் அறிவிப்பு வாதிக்கு அனுப்பினார். வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாமல் காசோலையை வாதிக்கு கொடுத்து பட்டுவாடாவை நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்த காரணத்தினால் எதிரி மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 138-ன் கீழ் தண்டிக்க கூடிய குற்றம் புரிந்துள்ளார். எனவே எதிரி மீது நடவடிக்கை எடுத்து வாதிக்கு இழப்பீடு வழங்கவேண்டியது அவசியமாகிறது. எனவே வழக்குப் படி தீர்ப்பாகவேண்டும்.”

இவ்வழக்கில் வாதி தங்கம் வா.சா.1ஆக விசாரிக்கபட்டுள்ளார். வாதியின் தங்கை தேவி வா.சா.2ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். ஐடிபிஐ வங்கியின் வேலூர்; கிளை மேலாளர் திரு.அரிகிருஸ்ணன் என்பவர் வா.சா.3 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். வாதி தரப்பில் 8 சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. வா.சா.ஆ.1 ஆக 15.07.2013 தேதியிட்ட ரு.3,00,000/-க்கான காசோலை அசலும், வா.சா.ஆ.2ஆக 17.07.2013 ஆம் தேதி இந்தியன் வங்கியிலிருந்து கொடுக்கப்பட்ட ரிட்டன் மெமோவாகாவும், வா.சா.ஆ.3 ஆக 01.08.2013 தேதியில் வாதி வழக்கறிஞர் மூலமாக எதிரிக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பின் அலுவலக நகலாகவும், வா.சா.ஆ.4 ஆக மேற்படி வழக்கறிஞர் அறிவிப்பை எதிரி சார்பில் பெற்றுக்கொண்டதற்கான அஞ்சலக ஒப்புகை அட்டையாகவும், வா.சா.ஆ.5 ஆக 13.08.2013 தேதி எதிரி கொடுத்த பதில் அறிவிப்பாகவும், வா.சா.ஆ.6 ஆக வா.சா.2 தேவியின் ஓட்டுனர் உரிமம் நீதிமன்ற ஒப்பீட்டு நகலாகவும், வா.சா.ஆ.7 ஆக வா.சா.2 தேவியின் வாக்காளர் அடையாள அட்டையும் நீதிமன்ற ஒப்பீட்டு நகலாகவும், வா.சா.ஆ.8 ஆக எதிரியின் வங்கி கணக்கிற்கான 01.07.2013 முதல் 31.08.2013 வரையிலான காலத்திற்குரிய ஸ்டேட்மெண்ட் ஆப் அக்கவுண்ட் குறியீடு செய்யப்பட்டுள்ளது. எதிரி தரப்பில் எந்த ஆவணங்களும் குறியீடு செய்யப்படவில்லை.

11. கற்றறிந்த வாதி தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தின்போது எதிரி வாதியின் வழக்கை எதிரிடையாக மெய்பிக்கும் வரையில் (unless the contrary proved) வாதியின் வழக்கு நிரூபிக்கப்பட்டுவிட்டதாக தான் மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 118-ன் படி நீதிமன்றம் அனுமானம் கொள்ளவேண்டும் என்றும், பிரிவு 139-ன் படி எதிரி வாதியின் வழக்கை எதிரிடையாக மெய்பிக்கும் வரை காசோலையை பெற்றவர் அதை பிரிவு 138-ல் சொல்லப்பட்ட காரணங்களுக்காக தான் பெற்றிருக்கிறார் என்று நீதிமன்றம் அனுமானம் கொள்ளவேண்டும் என்றும், எதிரியானவர் வாதியிடமிருந்து ரு.3,00,000/-பெற்றுக்கொண்டு அதற்கு மறுபயனாக வா.சா.ஆ.1 காசோலையை கொடுத்துள்ளார். வா.சா.ஆ.1 -ல் உள்ள கையெழுத்தை எதிரி மறுக்கவில்லை. வாதி தன்னுடைய வழக்கை 3 வாய் மொழி சாட்சியங்கள் வாயிலாகவும் 8 ஆவண சாட்சியங்கள் வாயிலாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளார் என்றும், எதிரியானவர் வாதியின் வழக்கை எதிரிடையாக மெய்பிக்கும் வகையில் எந்த வித வாய்மொழி சாட்சியமும், ஆவண சாட்சியமும் முன்னிலைப்படுத்தவில்லை என்றும், வாதியின் தங்கை தேவி எதிரியிடமிருந்து எதிரிக்கு தெரியாமல் வழக்கு காசோலையை எடுத்து வந்து வாதியிடம் கொடுத்து இந்த வழக்கை தாக்கல் செய்துவிட்டார் என்று எதிரி தரப்பில் வாதம் எழுப்பப்பட்டு இருந்தபோதும், அதை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்களை முன்னிலைப்படுத்தவில்லை என்றும், தேவியின் மீது ஏன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்படவில்லை என்பதற்கான காரணமும் எதிரி தரப்பில் விளக்கப்படவில்லை என்றும், மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 20-ன் படி மாற்றுமுறை ஆவணத்தை பெற்ற ஒரு நபர் அதை நிரப்பிக்கொள்ளலாம் என்றும், அதை கொடுத்தவர் கையொப்பம் செய்து இருந்தால் அதை சட்டப்படி செல்லக்கூடிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளலாம் என்றும், எதிரி காசோலையில் உள்ள தன்னுடைய கையொப்பத்தை மறுக்காத சூழ்நிலையில் சட்டப்படி மறுபயனுக்காகத்தான் வா.சா.ஆ.1 காசோலையை எதிரிக்கு வழங்கினார் என்றும், ஜூலை 2013. ஆகஸ்ட் 2013 ஆகிய மாதங்களில் வா.சா.ஆ.8-ன் படி எதிரியின் வங்கி கணக்கில் ரூ.3,00,000ஃ- பணம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், வாதி வேண்டுமென்றே பட்டுவாடா நிறுத்தம் செய்ய வங்கியில் ஆவண செய்து வாதியை ஏமாற்றியுள்ளதால் எதிரிக்கு அதிகபட்ச தண்டனையும் வாதிக்கு கு.வி.மு.ச. பிரிவு 357-ன் படி நஸ்டஈடு தொகை வழங்க வேண்டும் என்று வாதிட்டார். தனது தரப்பு வாதத்திற்கு ஆதரவாக 7 முன் தீர்ப்பு நெறிகள் ( Precedent ) சமர்ப்பித்து வாதிட்டார்

16. எதிரி தரப்பில் காசோலையில் தேதி யார் எழுதினார்கள் என்று எனக்கு தெரியாது என வாதி ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், எனவே மேற்படி காசோலை தன்மையில் முற்றிலும் மாறிவிட்டது. (Meterial alteration) என்ற குறைக்கு உள்ளாகிறது என்றும், வாதியே எதிரியை எனக்கு நேரடியாக தெரியாது என்று ஒப்புக்கொண்டு உள்ள சூழ்நிலையில் வாதி எப்படி எதிரியிடம் பணம் கொடுத்து இருக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து வாதியின் தொடர்புடைய சாட்சியத்தை பார்க்கும்போது அவர் எழுதி இருந்த காசோலையில் எதிரி கையெழுத்து போட்டு கொடுத்தார் என சாட்சியம் அளித்துள்ளார். மேலும் எதிரியை தன் தங்கை மூலமாக தெரியும் எனவும் சாட்சியம் அளித்துள்ளார். வா.சா.2 தேவியும் 15.07.2013 தேதி எதிரி ரூ.3,00,000/-க்கான காசோலையை வாதியிடம் எதிரி கையெழுத்திட்டு கொடுத்தார் என சாட்சியம் அளித்துள்ளார். மேற்படி வாய் மொழி சாட்சியங்கள் மற்றும் ஆவண சாட்சியங்கள் ஆகியகூற்றின் அடிப்படையிலும், எதிரி தரப்பில் வாதியின் வழக்கை எதிரிடையாக மெய்பிக்காத சூழ்நிலையிலும் வா.சா.1-ல் உள்ள தன்னுடைய கையொப்பத்தை எதிரி மறுக்காத சூழ்நிலையிலும், மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 118-ன் படி தகுந்த பிரதிபலனுக்காக தான் வா.சா.ஆ.1 காசோலை எதிரியால் வாதிக்கு வழங்கப்பட்டது என்று. இந்நீதிமன்றம் முடிவு செய்கின்றது. கற்றறிந்த வாதியின் வழக்கறிஞர் தாக்கல் செய்த முன்தீhப்;பு நெறிகளை பார்க்கும்போது 2013 (2) லா வீக்லி (கிரிமினல்) பக்கம் 414-ல் பிரசுரிக்கப்பட்டுள்ள கேசவமூர்த்தி எதிர் அப்துல் ஜபார் வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வழக்கு காசோலையானது திருப்பட்டுள்ளதை வாதி முதல் நிலை தோற்ற (Prima facie ) வழக்காக நிரூபித்துவிட்டால் வழக்கை மெயப்பிக்கும் சுமை எதிரியை சென்று அடையும் என மிக தெளிவுபட கூறியுள்ளது. மேற்படி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சட்ட கொள்கையானது இவ்வழக்கின் சூழ்நிலைகள் மற்றும் பொருண்மைகளுக்கு முற்றிலும் பொருந்துவதாக அமைந்துள்ளது. ஏன்னெனில் கையில் உள்ள வழக்கிலும் காசோலை திருப்பப்பட்டதற்கான முதல்நிலை தோற்ற வழக்கை வாதி நிரூபித்துள்ளார். ஆனால் எதிரி வாதியின் வழக்கை எதிரிடையாக மெய்ப்பிக்கவில்லை.

17. வாதி தரப்பில் தாக்கல் செய்துள்ள 2010 (4) MLJ(Cri) 302 வழக்கை பார்க்கும்போது
2010 (4) MLJ(Cri) 302
Spenser David Vs. Virjin Mary
"In view of Section 139 of the Negotiable Instruments Act, it has to be presumed that a cheque is issued in discharge of any debt or other liability and the presumption can be rebutted by adducing the evidence and the burden of proof is on the person who wants to rebut the presumption."
மேற்படி தீர்ப்பில் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் பிரிவு 139 மாற்றுமுறை ஆவணச்சட்டம் படி ஒரு காசோலை வழங்கப்பட்டுவிட்டால் அதை எதிரி தரப்பில் எதிரிடையாக மெய்பிக்கும் வரை அது தகுந்த பிரதிபலனுக்காகதான் வழங்கப்பட்டதாக கட்டாயம் அனுமானம் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் கூறப்பட்டுள்ள சட்ட கொள்கையானது கையில் உள்ள வழக்கின் சூழ்நிலைகள் மற்றும் பொருண்மைகளுக்கு முற்றிலும் பொருந்தி வருகின்றது. ஏன்னெனில் இவ்வழக்கிலும் எதிரி வாதியின் வழக்கை எதிரிடையாக மெய்ப்பிக்கவில்லை.

18. கற்றறிந்த வாதி தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த மற்றொரு உச்ச நீதிமன்ற தீர்ப்பு 2003 STPL(LE) 32528SC GOA PLAST (P) LTD Vs APPLLANTS V. RESPONDENTSB வழக்கில் காசோலையானது பட்டுவாடா நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டது என திரும்ப வந்தால் பிரிவு 138 மாற்றுமுறை ஆவணச்சட்டத்தின் கீழ் காசோலை வழங்கியவர் மீது வழக்கு தாக்கல் செய்ய எவ்வித தடையும் இல்லை என மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தெளிவுபட கூறியுள்ளது. மேற்படி வழக்கில் கூறப்பட்டுள்ள சட்ட கொள்கையானது கையில் உள்ள வழக்கின் சூழ்நிலைகள் மற்றும் பொருண்மைகளுக்கு முற்றிலும் பொருந்தி வருகின்றது. ஏனெனில் இவ்வழக்கிலும் எதிரி பணம் பட்டுவாடாவை நிறுத்தம் செய்துள்ளார். எனவே மேற்குறிப்பிட்டுள்ள முன்தீர்ப்புரைகளில் கூறப்பட்டுள்ள சட்ட கருத்துக்கள் இவ்வழக்கு சங்கதிகளுக்கு பொருத்தமாகவே உள்ளது என்று இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது.

19. மாற்றுமுறையாவன சட்டம் பிரிவு 20-ன் படி ஒரு நபர் மாற்றுமுறை ஆவணம் ஒன்றில் கையொப்பம் செய்து அதை மற்ற நபருக்கு கொடுத்துவிட்டால் அதை பெற்றவர் நிரப்பிக்கொள்ளலாம் என்றும், அதில் கையொப்பம் செய்த நபர் அந்த ஆவணத்திற்கு கட்டுப்பட்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கிலும் எதிரியானவர் வா.சா.ஆ.1 காசோலையில் உள்ள தன்னுடைய கையொப்பத்தை மறுக்கவில்லை. மேலும் வா.சா.2 தேவி காசோலையை தன்னுடைய அலுவலகத்திலிருந்து தனக்கு தெரியாமல் எடுத்து சென்றுவிட்டார் என்பதும் எதிரி தரப்பில் நிருபிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் மாற்றுமுறை ஆவண சட்டம் பிரிவகள் 118, 139, 20 ஆகியவை வாதியின் வழக்கிற்கு சாதகமாக உள்ளன. மேற்படி சட்டப்பிரிவுகளின் படியும், வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வாதி தரப்பு ஆவணங்கள் படியும், வாய்மொழி சாட்சியங்களின் அடிப்படையிலும், வாதியின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன் தீர்ப்பு நெறிகளின் அடிப்படையிலும் எதிரி தகுந்த பிரதி பலனுக்காக தான் வா.சா.ஆ.1 காசோலையை எதிரிக்கு வழங்கினார் என்று இந்த நீதிமன்றம் முடிவு செய்து எதிரியின் மீது மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 138 ன் கீழ் சாட்டப்பட்டுள்ள குற்றம் வாதி தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என முடிவு செய்து அவ்வாறே பிரச்சனைக்கு தீர்வு காணப்படுகிறது.

20. எதிரியை குற்றவாளி என்று முடிவு செய்துள்ள சூழு;;நிலையில் வாதிக்கு ஏற்பட்டுள்ள நஸ்டத்தை எதிரி ஈடுகட்ட வேண்டியது அவசியமாகின்றது. எனவே வாதி காசோலைiயில் கண்ட தொகையை நஸ்ட ஈடாக எதிரியிடமிருந்து பெற தகுதியுடையவர் என்று இந்த நீதிமன்றம் முடிவு செய்கின்றது.

21. இறுதியில் மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 138 ன் கீழ் எதிரியை குற்றவாளி என முடிவு செய்து அவருக்கு 1 ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 3,000/- அபராதமும் விதிக்கப்படுகிறது. எதிரி அபராத தொகையை கட்டத் தவறினால் 2 மாதங்கள் மெய்க்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென தீர்ப்பளிக்கப்படுகிறது. இது அழைப்பாணை வழக்கு என்பதால் எதிரியிடம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து கேள்விக் கேட்கப்படவில்லை. இருப்பினும் எதிரி பெண் என்பதால் குறைந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து 3 மாதத்திற்கு எதிரி வாதிக்கு கு.வி.மு.ச. பிரிவு 357-ன் படி 3 லட்சம் ரூபாய் நஸ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று உத்திரவிடப்படுகிறது.

No comments:

Post a Comment