இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 279,338, 304(ஏ) Section 279 of Indian Penal Code 1860

உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கொடுமுடி
ஆண்டுப்பட்டிகை வழக்கு எண்.35/2012

அரசுக்காக: காவல் ஆய்வாளர்,
சிவகிரி காவல் நிலையம்.(கு.எண்.14/2012)  ……முறையிடுபவர்
/எதிர்/
பாலகிருஷணா த/பெ.ராமசாமி  ;           ………………….. எதிரி

குற்ற முறையீடு: 
இ.த.ச. 279, 338, மற்றும் 304(ஏ) பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர் என்று முறையிடுபவர் தரப்பில் குற்ற அறிக்கை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

தீர்ப்பு:
“அதே சமயம் மோட்டார் வாகன ஆய்வாளர் மேற்படி விபத்து இயந்திர கோளாறினால் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேற்படி விபத்து எதிரியின் கவன குறைவாலும் அஜாக்கிரதையாலும் ஏற்பட்டது என்று நீதிமன்றம் முடிவு செய்கிறது. இந்த விபத்தில் காயம்பட்ட சுசிலா என்பவர் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்துள்ளார். மேற்படி இறப்பு இந்த விபத்தினால் ஏற்பட்டதால் எதிரி இ.த.ச. 304(ஏ) பிரிவின் கீழ் குற்றவாளி என்று நீதிமன்றம் முடிவு செய்கிறது.”

“அவருக்கு சிகிச்சைஅளித்த மருத்துவர் அவருக்கு10 காயங்கள் இருந்ததாக தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் எக்ஸ் ரே எடுத்தவர்கள் வலது கால் தொடை எலும்பு முறிந்து இருந்ததாகவும், வலது முழங்காலுக்கு கீழ் பகுதியில் இரண்டு எலும்பு முறிவு இருந்ததாகவும், இடது காலிலும் இரண்டு எலும்புகள் முறிந்து இருந்ததாகவும், இடது கணுக்காலுக்க சற்று மேலாக எலும்பு முறிவு இருந்ததாகவும், மூளையிலும் இரத்தக் கசிவு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 10 காயங்யளில் 6 காயங்கள் கொடுங்காயம் என்று மருத்துவர் சாட்சியம் அளித்துள்ளார். ஆவற்றை மறுக்கும் விதத்தில் எதிரி தரப்பில்; எந்த ஒரு குறுக்கு விசாரணையும் செய்யவில்லை. ஆகவே மேற்படி காயமானது அ.சா.7-க்கு இந்த விபத்தினால் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த விபத்து எதிரியின் அஜாக்கிரதையாலும், கவன குறைவாலும் ஏற்பட்டுள்ளதால் அ.சா.7-க்கு கொடுங்காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக எதிரி இ.த.ச. 338 பிரிவின் கீழ் குற்றவாளி என்று நீதிமன்றம் முடிவு செய்கிறது.”
21. முடிவாக இ.த.ச. 279, 338, 304(ஏ) பிரிவுகளின் கீழ் குற்றவாளி என்று முடிவு செய்து, எதிரிக்கு இ.த.ச. 304(ஏ) பிரிவின் கீழ் ஒரு வருடம் கடுங்காவல் சிறை தண்டணையும், ரூ.3,000/- அபராதமும் விதித்தும், இ.த.ச 338 பிரிவின் கீழ் ரூ.1,000/- அபராதம் விதித்தும், மேற்படி அபராதத்தைக் கட்டத் தவறினால் தலா 1 மாதம் மெய்க்காவல் சிறைதண்டணை விதித்தும் உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கில் 304(ஏ) பிரிவின் கீழ் எதிரிக்கு தண்டணை வழங்கப்பட்டு விட்டதால் இ.த.ச. 279 பிரிவின் கீழ் தனியாக தண்டணை ஏதும் விதிக்கப்படவில்லை.
முழுமையாக படிக்க CC.NO:35/2012

No comments:

Post a Comment