போதைப்பொருள் தடுப்புச் சட்டம்1985 பிாிவு 8(சி) உடன் இணைந்த பிாிவு 20(பி)(2)(எ) | NDPS Act 1985 Section 8(c) r/w Section 20(b)(ii)(A)

நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்.5 திருச்சிராப்பள்ளி
சுருக்க விசாரணை வழக்கு எண்.4336/2014
06.04.2015
அரசுக்காக பாலக்கரை
காவல் நிலைய காவல்
உதவி ஆய்வாளர். நிலையக்
குற்றஎண்.769/2014.........................................குற்றமுறையிடுபவர்
                         /எதிர்/
ஆரோக்கியசெல்வி,40/14…........................................எதிரி

வழக்கில் கூறப்பட்டுள்ள  முக்கிய குறிப்புகள்:

ஒரு நபர் தன்னுடன் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை தன்னோடு வைத்திருந்தார் என்ற அடிப்படையில் மட்டும் அவரை ஒரு நீதிமன்றம் தண்டிக்கக்கூடாது

வழக்கில் கூறப்பட்டுள்ள முன்தீா்ப்புகள்
(2012) 3 MLJ(Crl) 675 (SC)
MylaVenkateswarlu ....Appellant
Versus
State of Andra Pradesh ..... Respondents

2013-1-LW (Crl.) 337
Suresh and Others ...Appellant
Versus
State of Madhya Pradesh ....Respondent.

#போதைப்பொருள் தடுப்புச் சட்டம் பிாிவு 8(சி) 
உடன் இணைந்த பிாிவு 20(பி)(2)(எ)
#போதைப்பொருள் தடுப்புச் சட்டம் பிாிவு 50(1) 


என்.டி.பி.எஸ் ஆக்டின் கீழ் ஒரு நபர் குற்றம் புரிந்துள்ளார் என்று சந்தேகம் எழுந்தால் அவரை விசாரணை அதிகாரி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணினால் அந்த நபர் சோதனை செய்வதற்கு முன்பு அவர் நடுவர் முன்போ அல்லது பிாிவு 50(1) என்.டி.பி.எஸ் ஆக்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதிகாாிகள் முன்பு சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்ற உாிமை அவருக்கு உள்ளது என்று அந்த நபருக்கு தெரிவிக்கப்படவேண்டியது காவல் அதிகாாியின் கடமையாகும். மேலும் அவ்வாறு சந்தேகப்படும் நபருக்கு தொிவித்து அவர் நடுவர் முன்போ, அல்லது வேறு அதிகாாிகள் முன்போ, சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினால் அவ்வாறு அவரை அவர்கள் முன்பு சோதனைக்கு உட்படுத்தவேண்டும். அல்லது அந்த நபர் விரும்பவில்லை என்றால் காவல்துறையை சேர்ந்த அதிகாாிகளோ, அவரை சோதனை செய்யலாம் என்ற நடைமுறை உள்ளது. இதையே மாண்புமிகு உச்ச நீதிமன்றம் மேற்கண்ட இரண்டு தீர்ப்புகளில் சுட்டிக்காட்டப்பட்ட அந்த நடைமுறையை கண்டிப்பாக பின்பற்றப்படவேண்டிய ஒரு நடைமுறையாகும் என்றும் அந்த நடைமுறையை மீறி விசாரணை அதிகாாி ஒரு நபரை சோதனைக்கு உட்படுத்தி அவாிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றி அவரை கைது செய்திருந்தால் அந்த நபர் தன்னுடன் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை தன்னோடு வைத்திருந்தார் என்ற அடிப்படையில் மட்டும் அவரை ஒரு நீதிமன்றம் தண்டிக்கக்கூடாது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
முழுமையாக படிக்க  ---STC.NO:4336/2014

No comments:

Post a Comment